சென்ற பகுதியின் தொடர்ச்சி…
கவின் தன் மனதில் இருந்த காதலை மதுமிதாவிடம் வெளிப்படுத்திய பிறகும் மதுமிதா பயத்துடன் கூடிய ஒரு மனநிலையிலே இருந்தான். அதை பார்த்த கவின்,
“ஏய் மது வாட் ஹேப்பன்ட். ஏன்? இன்னும் ஒரு மாதிரியே இருக்க.. நீ அடிச்சதுனால உன்னைய கட்டாயபடுத்தி லவ் பண்ண வைக்கனும் நா நெனக்கல.
உண்மையிலே உன்ன எனக்கு பிடிச்சிருக்கு.. அதான் ப்ரோப்போஸ் பண்ணினேன்.” சொல்ல அப்பவும் அமைதியாக இருந்தாள்.
“இட்ஸ் ஓகே மது.. உன் பதில் எதுவாக இருந்தாலும் நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சொன்ன போதும்.” கவின் சொல்ல மது தலையை மட்டும் ஆட்டினாள்.
“உனக்கு நேர்ல பாத்து சொல்ல பயமா இருந்தா கால் ஆர் மெசைஜ்ல கூட சொல்லிடு” சொல்லிவிட்டு.
அவளின் கையை பிடித்து உள்ளங்கையில் அவனின் மொபைல் நம்பரை ஸ்மைலியுடன் எழுதிவிட்டு நகர மதுமிதா என்ன செய்வதென்று புரியாமல் அங்கையே நின்றாள்.
அந்த சமயம் பார்த்து இரு கும்பல் டுவீலரில் வந்து மதுமிதாவிடம் ஏதோ பிரச்சனை செய்ய வந்ததை பார்த்து அவனுடைய வண்டியின் சைடு மிரரில் பார்த்ததும் கவின் வண்டியை வேகமாக திரும்பிக் கொண்டு மதுமிதா நோக்கி வந்தான்.
அதற்குள் அதில் ஒருத்தன் அவளின் சுடிதார் ஷாலை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய ஆரம்பித்திருந்தான்.
கவின் அந்த கும்பலிடம் போய்..
“டேய் யார்டா நீங்க.. எதுக்கு இந்த பொண்ணுட்ட மிஸ் பிகேவ் பண்ணிட்டு இருக்கீங்க..?” கேட்க
அந்த கும்பலில் இருந்த ஒருத்தன்,
“த்தோடா வந்துட்டார் துரை.. இவள காப்பாத்த.” நக்கலாக சொல்ல அடுத்த வினாடியே கவினின் கை அவனின் கன்னத்தை பதம் பார்த்தது.
உடனே அந்த கும்பலில் இருந்த இருவர் இவனை தாக்க வர அவர்களின் கன்னத்தை பதம் பார்க்க மற்ற இருவர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தனர்.
கவின், “எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ்க்காரன் மேலேயே கை வைப்பீங்க..” சொல்ல
அந்த கும்பல் மொத்தமும் பயந்து நடுங்கி,
“சாரி சார் தெரியாம நடந்திருச்சு.. பெருசு பண்ணாம விட்டுருங்க சார். கேஸ்லாம் எதுவும் வேணாம் சார்.. வேணா உங்க கால்ல கூட விழுந்துறோம் சார்.. எங்கள விட்டா போதும் சார்..” கெஞ்ச
கவின் அவர்களிடம், “எதுக்குடா இந்த பொண்ணுட்ட தப்பா நடந்துக்க பாத்தீங்க?” கேட்க
“இந்த பொண்ணு தான் சார் முதல்ல பிரச்சனை பண்ணது. நீங்க போலீஸ் தான சார். அது என்னானு கேளுங்க சார்.” சொல்ல கவின் மதுமிதாவை பார்க்க அவள் தலையை குனிந்து கொண்டாள்.
இவர்களிடமும் கையை நீட்டியிருக்கிறாள் என அப்பவே கவினுக்கு புரிந்துவிட்டது..
இருந்தாலும் உறுதிபடுத்திக் கொள்ள அவர்களிடமே கேட்டான்..
“ஏய். என்னடா பண்ணுச்சு அந்த பொண்ணு.?”
“என்ன பண்ணுச்சா. நல்லா கேட்டிங்க சார்.. வண்டிய லேசா இடிச்சதுக்கு போய் கைய நீட்டி அடிக்குது சார். ரொம்ப அசிங்கமா போய்டுச்சு சார்..”
“ஓ. அதான் அந்த பொண்ணுட்ட தப்பா நடந்துக்க கும்பலா வந்திங்களா?” அவர்களை பார்த்து மிரட்டி கேட்க அவர்கள் பதில் எதுவும் செல்லாமல் இருக்க அதன் பிறகு கவின் அந்த கும்பலை வார்ன் பண்ணி அனுப்பி வைத்தான்.
அந்த கும்பலும் அதன் பிறகு எந்த பிரச்சினையும் பண்ணாமல் சென்றனர்.
மதுமிதாவை பார்த்து, “உனக்கு வேற வேலையே இல்லையா? யார் உன் வண்டியில இடிச்சாலும் கைய நீட்டி அடிச்சிடுவியா?” கவின் கேட்க அமைதியாகவே இருந்தாள்.
“உன்ன தான் கேக்குறன். அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” சத்தமாக கேட்க
“நா ஒன்னும் வேணும் அடிக்கல. வண்டியில இடிச்சதுக்கு தான் அடிச்சேன்.”
“வண்டிய தான இடிச்சானுங்க.. ஏதோ உன்னைய இடிச்ச மாதிரியே அடிச்சிட வேண்டியது.. பின்னாடி வர்றத யோசிக்குறத இல்ல” கவின் முனுமுனுக்க அது அவளின் காதில் விழுந்தாலும் தன்னை காப்பாற்றியதற்காக அமைதியாக இருந்தாள்.
“நீ அடிச்சதுக்கு பாத்தியா கும்பலா வந்துட்டானுங்க.. நா இல்லைனா உன் நிலைமை என்ன ஆகியிருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு..”
“நீங்க மட்டும் தடுத்து நிறுத்தாம இருந்திருந்தா இந்நேரம் நா வீட்டுக்கே போயிருப்பேன்” சத்தம் முழுமையாக வெளிவராமல் மெதுவாக சொன்னாள்..
“இப்ப கூட உன்ன காப்பாத்தினதுக்கு தாங்க்ஸ் சொல்லுவ பாத்தா பழிய என் மேல தூக்கி போடுற.”
“நா ஒன்னும் உங்க மேல பழி போடல.. ரெண்டு மூனு நாள்ளா காலேஜ் விட்டதும் வேகமாக வீட்டுக்கு போய்டுவேன்.”
“ஓ.. அதான் உன்ன ரெண்டு மூனு நாள்ள பாக்க முடியலையா?” நக்கலாக கேட்க
“நீங்க ஏன் என்னைய பாக்கனும் நெனச்சீங்க.?”
“ம்ம்.. அதான் பாத்து சொல்லிட்டேன்ல..”
“என்ன சொன்னீங்க?” மதுமிதாவும் நக்கலாக கேட்க
“ஐ லவ் யூ மது மீ தா னு.. பளீச்னு சொன்னேன்ல.. உன் காதுல கேட்கலையா?”
“கேட்டுச்சு.. ஆனா இந்த கும்பல் பயத்துல இருந்தனால என்னால அத பத்தி திங்க் பண்ண முடியல..”
“ஓ.. இப்ப தான் கும்பல கிளியர் பண்ணிட்டேன்ல.. இப்ப யோசிச்சு பாரு..”
“ம்ம்.. பாக்குறேன்.. பாக்குறேன்.. டைம் கெடைக்கும் போது” வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சொன்னாள் மதுமிதா..
“அப்போ நா சொன்னதுக்கு என்ன பதில்?” கவின் கேட்க
“இப்ப எல்லாம் எந்த பதிலும் சொல்ல முடியாது. அதான் நீங்களே நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சொன்னா போதும் சொல்லிட்டிங்களே. பின்ன ஏன் இப்பவே கேக்குறீங்க?”
“ஓ.. ஓகே மேடம்.. இப்ப என்ன பண்ணலாம்?” இழுக்க..
“இப்ப நா வீட்டுக்கு போகலாம் நெனக்கிறேன்..”
“ம்ம்.. ஷியர்.. போலாம்.” சொல்ல குலுக்கென்று சிரித்துவிட்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தாள்.
மதுமிதா தன் வீட்டிற்கு சென்றதும் தனக்கென்று இருந்த ரூமில் கண்ணாடி முன்னால் நின்று தன் உடலழகை முன்னும் பின்னும் திரும்பி திரும்பி பார்த்து தனக்கு தானே மெச்சிக் கொண்டாள்.
இதற்கு முன் அவளின் அழகை பற்றி இதுமாதிரி எவரும் பேசியதில்லை. ஆனால் இன்று ஒரு அழகான ஆண்மகன் தன்னிடமே வந்து தன் அழகை பற்றி பெருமையாக சொல்லி அவன் மனதில் இடம் பிடித்த.
என்னிடம் தன் காதலை ஒரு இக்காட்டான சூழ்நிலையில் மிக தைரியமாக சொல்லியிருப்பது அவளுக்கு கொஞ்சம் பெருமையாக, ஏன் கர்வமாக கூட இருந்தது.
அவளின் உள்ளங்கையில் எழுதியிருந்த கவின் நம்பரை பார்த்ததும் தன் காலேஜ் பேக்கில் இருந்த மொபைலை எடுத்து அவனின் நம்பரை டைப் செய்ததும் என்ன பெயர் போட்டு சேவ் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவனுடைய பெயருக்கு குகிலிளில் அர்த்தத்தை பார்த்து அதில் ஒன்றை சேவ் செய்யலாம் என முடிவு செய்து அவனுடைய பெயரின் அர்த்ததை குகிலிளில் தேடினாள்.
அவனுடைய பெயருக்கான அர்த்தம் “பியூட்டிஃபுல்”, “ஹேன்சம்” என வந்தது.
ம்ம்.. அவனும் அந்த அர்த்தத்திற்கு ஏற்ற மாதிரி அழகாகவும் ஹேன்சம்மாகவும் தான் இருக்கிறான் என தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.
இப்போது அவனுடைய என்னவென்று சேவ் செய்யலாம் என நினைத்துக் கொண்டே தன்னையும் அறியாமல் “மை பியூட்டி” என டைப் செய்துவிட்டாள்.
பின் சுதாரித்து சிரித்துக் கொண்டே ‘மை’ ஐ மட்டும் அழித்துவிட்டு பியூட்டியுடன் ஹார்ட் அன்ட் ஸ்மைலி சேர்த்துக் கொண்டாள்.
அவனின் நம்பரை சேவ் செய்த பிறகு அவனை நினைத்த படி “யூ ஆர் மை பியூட்டி டா” என கண்ணாடி முன் நின்று உதட்டை குவித்து கொஞ்சினாள்..
மதுவின் அம்மா ரூம்க்கு வந்து பார்த்து,
“ஏய் மது காலேஜ் விட்டு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னும் டிரஸ் மாத்தாம கண்ணாடி முன்ன நின்னு கனவு கண்டுட்டு இருக்க. இதலாம் எங்க போய் முடிய போகுதோ” தலையில் அடித்தபடி சொல்லிவிட்டு சென்ற பிறகு தான் வந்து 15நிமிடத்திற்கு மேல் ஆனதை உணர்ந்து நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம்குள் சென்றாள் மதுமிதா..
மது மீண்டும் தன் கையில் எழுதியிருந்த அவனின் பெயரையும் நம்பரையும் பார்த்தாள்..
“டே கவின். நீ லவ் ப்ரோப்போஸ் பண்ணப்ப கூட பெருசா உன்ன பத்தி நெனக்கல. ஆனா நீ அந்த கும்பல்ட்ட இருந்து காப்பாத்தினா பாரு. அதுல இருந்து தான் நீ என் மனச என்னமோ பண்ணிட்டடா.
அத எப்படி சொல்றது கூட தெரியல. அது நீ சொன்ன மாதிரி காதலா கூட இருக்கலாம்.. ஆனா அது நிச்சியமா லவ் தானா எனக்கு தெரியலடா. சாரிடா. நீ என் கைய தொட்டு எழுதும் போது கூட என்னால அத ரசிக்க முடியல.
நா இருந்த சிட்டிவேஷன் அப்படி.. நா உன்னைய கை நீட்டி அடிச்சிருந்தாலும் நீ அந்த கும்பல் மாதிரி மிஸ் பிகேவ் பண்ணாம டீசண்டா பயமுறித்தினியே தவிர வேறு எதுவும் பண்ணலடா.. நீ ஜென்டில் மேன் டா..
இல்ல இல்ல.. ஜென்டில் ஹேன்சம் டா.. உம்ம்மா. உம்ம்மா.. உம்ம்மா..” தன் அழகிய உதட்டால் அவனின் பெயரை மூன்று முறை முத்தமிட்டாள்..
மீண்டும் மதுவின் அம்மா சத்தம் குடுக்க அவசரம் அவசரமாக சுடிதாரை கழட்டி எறிந்துவிட்டு நைட்டியை மாட்டி முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு தன்பெட்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
அதன் பின் அவளின் அம்மாவுடன் சேர்ந்து சில வீட்டு வேலைகளை செய்தாள். இரவு உணவுக்கு சாப்பிட்டு தன் ரூமில் வந்து படுத்து அவளின் மொபைலை எடுத்து வாட்ஸ்அப்பில் அவனுடைய நம்பர் இருக்கிறதா என நெட் ஆன் பண்ணி பார்த்தாள்.
அவளுடைய கான்டாக்ட் ரெப்ரஸ் ஆகி இவள் சேவ் செய்த பியூட்டி வாட்ஸ்ஆப்பில் காட்ட அவளின் மனதும் குதுகலமடைந்தது.
வாட்ஸ்அப்பில் அவனுடைய ப்ரோபிலில் இருந்த இருந்த டிபியை கிளிக் பண்ணி பார்த்தாள்.
அதில் அவனுடைய வசிகரிக கூடிய முகம் சிரித்தபடி இருக்க மதுமிதாவும் அவளையும் அறியாமல் அவனின் ஃபோட்டாவை பார்த்து சிரித்தாள். அவனை பார்த்து சிரித்த பின் வெட்கவும் பட்டுக் கொண்டாள்..
“நீ ஃபோட்டாவிலே இவ்வளவு அழகா இருக்கியேடா பியூட்டி.. உன் மேல இருக்குறது என்னனு தெரியலேடா.. லவ்வா இருந்தாலும் இந்த மனசு அத ஒத்துக்கமாட்டேன் பிடிவாதம் பிடிக்கிற மாதிரியே இருக்கேடா.
இப்ப நா என்ன பண்றது? நீயே சொல்லுடா.” கவின் ஃபோட்டாவை பார்த்து பேசிக் கொண்டிருக்க அவளின் மொபைல் ரிங் ஆனது…
இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.