Skip to content
Home » மது மீ தா – 7

மது மீ தா – 7

மது மீ தா – 1

மது மீ தா – 3

மது மீ தா – 6

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

கவினும் முந்தைய நாள் மதுமிதாவுடான அந்த சந்திப்பிற்கு பின் அவன் நினைவு முழுவதும் அவளே நிறைந்திருந்தாள்.

அவள் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவளின் அந்த பயத்துடன் கூடிய பப்ளியான முகமே தெரிந்தது.

அந்த முகத்தை நினைத்து பார்த்ததும் அவனையும் அறியாமல் உதட்டை விரித்து சிரிக்க ஆரம்பித்து விடுவான்.

அவனின் எண்ணங்கள் எல்லாம் அடுத்து அவளை எப்போது சந்திப்போம் பேசுவோம் என்றே இருந்தது. அன்றைய நாள் முழுவதும் அவனின் நினைவுகளிலும் எண்ணங்களிலும் மதுமிதாவே நிறைந்திருந்தாள்.

அடுத்த நாள் காலையில் எழும் போதே மதுமிதா எப்படியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் மிகவும் உற்சாகமாகவே எழுந்தான்.

அவளை நினைத்தபடியே சுறுசுறுப்பாக இயங்கி காலேஜ்க்கு தயராகி அந்த நினைவுகளுடனே வண்டியில் அவள் வரும் அந்த ஹை வே சாலையில் பயணிக்க ஆரம்பித்தான்.

எப்போதும் செல்லும் வேகத்தை விட மிதமான வேகத்தில் அவள் கண்ணில் எதும் தென்படுகிறாளா என பார்த்துக் கொண்டே கிட்டதட்ட அந்த சிக்னலை நெருங்கிவிட்டான்.

அந்த சிக்னலை நெருங்க நெருங்க அவள் வருவளா நாம் பார்ப்போமா பார்க்க முடியுமா என்ற எண்ணம் அவனின் மனதிற்குள் இதய துடிப்பு மாதிரி அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அந்த சிக்னிலில் வந்து நின்றதும் அவனின் கண்கள் முதலில் அவளை எதுவும் தென்படுகிறளா என தான் பார்த்தது.

அந்த ஒன்றரை நிமிடமித்தில் அந்த சிக்னலில் நின்ற அனைத்து வண்டியையும் அவனின் கண்கள் பார்த்துவிட்டன.

அங்கு அவளையும் அவள் வண்டியையும் காணவில்லை.. அது கவினுக்கு ஒருவித ஏமாற்றத்தை தந்தது.. நேற்று நடந்துக் கொண்டதில் எதுவும் பயந்து வீட்டிலே இருக்கிறளா? இல்லை காலேஜிற்கு பஸ்ஸில் எதுவும் வருகிறாளா? என அவன் மனதிற்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் சிக்னல் விழுந்ததும் அந்த யோசனையுடனே காலேஜ்க்குள் வந்து சேர்ந்தான்.

கவின் எப்போதும் போலவே அவனின் பைக்கை நிறுத்திவிட்டு அந்த பைக் ஸ்டாண்டிலே உட்காந்திருந்தான். மது எதுவும் வருகிறாளா என அவனின் கண்கள் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தன.

ஆனால் அவள் வரவில்லை. அதற்கு முன் திருவும் முத்தாவும் தான் அவனை தேடி அவனிருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ ஏதோ பேசிக் கொண்டிருக்க இவனின் கவனம் முழுவதும் மது வருகிறாளா என பார்ப்பதிலே தான் இருந்தது. கிட்டதட்ட பதினைந்து நிமிடமாக அங்கையே மூவரும் இருந்தனர்.

அப்போது கூட மதுமிதா காலேஜிற்கு வரவில்லை..

கிளாஸ் ஆரம்பிப்பதற்கான பெல்லும் அடித்துவிட மூவரும் பைக் ஸ்டாண்டை விட்டு கிளாஸ்ற்கு சென்றனர்.

கவின் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் முந்தைய நாள் கேட்ட அதே ஹாரன் சத்ததுடன் அந்த ஸ்கூட்டி காலேஜ்க்குள் என்டர் ஆவதை கவனித்து திரும்பி பார்த்த போது மது அவள் வழக்கமாக வரும் ஸ்கூட்டியில் உள்ளே நுழைந்து வேகமாக சென்றாள்.

அவள் காலேஜ்க்கு வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவளிடம் பேச முடியவில்லை என நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் இருக்கதான் செய்தது.

அன்று மாலை காலேஜ் முடிந்ததும் பார்த்து பேசிக் கொள்ளலாம் என்ற நினைப்புடனே கிளாஸ்க்கு சென்றான் கவின்.. அங்கு சென்றதும் அவனின் மனம் அங்கு இல்லாமல் அவளை எப்போது சந்தித்து பேசுவோம் என்று தான் ஏங்கிக் கொண்டிருந்தது.

அவன் கையில் கட்டியிருந்த வாட்ச்ஸை மணிக்கொரு முறை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் கடந்து சென்ற ஒவ்வொரு வினாடியும் நிமிடமும் ஒவ்வொரு யுகம் போல் கடந்து சென்றது.

அவனுக்கு அங்கிருக்க மனமில்லாமல் தன்னையும் தன் மனதையும் அடக்கி கொண்டு கிளாஸில் உட்காந்திருந்தான்.

மது எந்த டிபார்மெண்ட் என தெரிந்தாலாவது அங்கு போய் நின்று அவளை பார்க்கலாம் என மனதிற்குள்ளே யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இதை தான் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும் என கவின் தன் மனதில் நினைத்துக் கொண்டான். தன் மனதிற்குள்ளே அவளை நினைத்து பேசிக் கொண்டிருந்தான். அன்று முழுவதும் அவளின் நினைவாகவே இருந்தான்.

அன்று மாலை காலேஜ் முடிந்ததும் அவளுக்காக வெளியில் வந்து காத்திருந்தான். ஆனால் அவளோ அவளின் வண்டியோ கண்ணில் படவே இல்லை.

கவினுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்போது தானே காலேஜ் முடிந்தது. அதற்குள்ளே வா வண்டியை எடுத்துக் கொண்டு காலேஜை விட்டு வெளியே சென்றிருப்பாள் என யோசித்துக் கொண்டிருந்தான்.

கவினுக்கு இன்று முழுவதும் பெருத்த ஏமாற்றம் நிறைந்த நாளாகவே அமைந்தது. அந்த ஏமாற்றம் நிறைந்த மனதுடனே அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

கவின் வழக்கமாக கடந்து வரும் அந்த சிக்னலில் அதே கலரில் ஒரு ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டியை தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்டான்.

அவனின் மனதிற்குள் ஒரு சிறு பரிதவிப்பு அது மதுமிதாவா இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டே அந்த சிக்னலை நோக்கி வந்து நிற்க அதற்குள் சிக்னல் விழுந்துவிட அந்த ஸ்கூட்டியும் நகர்ந்து சென்றது.

அந்த ஸ்கூட்டியில் பெண் யாரென்றே தெரியவில்லை. அதற்கு பதிலாக அந்த வண்டியின் எண்ணை பார்த்தான்.

அதை வைத்து தான் அது மது இல்லை என தெரிந்துக் கொண்டான்.. இங்கும் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

அதன் பின் வந்த நாட்களில் மதுமிதாவை காலை மாலையிலும் கவினால் பார்க்கவே முடியவில்லை. அவனின் கண்ணில் அவள் படவே இல்லை.

தன் மனதில் வந்து இடம் பிடித்தவளை இப்போது தன்னால் பார்க்கவில்லை என்ற ஏக்கம் அவனின் மனதை வாட்டி வதக்கியது.

அவளை எப்படியாவது சந்தித்து பேசி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனின் மனதில் அழுத்தமாக இருந்தது.

ஆனால் அவளை எப்படி சந்திப்பது? யார் மூலம் அவளை பற்றி தெரிந்து கொள்வது? என்ற குழப்பமும் கூடவே சேர்ந்து இருந்தது. அந்த குழப்பத்துடன் அந்த வாரத்தின் நான்கு நாட்கள் கடந்துவிட்டன..

அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை மாலையில் தான் கவின் மதுமிதாவை பார்த்தான். ஆனால் அவள் இவன் இருப்பதை பார்க்காமல் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

அப்படி செல்லும் போது அவளின் முகம் ஏதோ பயத்தில் இருப்பது போலவே இருந்தது.

கவின், தான் சொன்னதை நினைத்து தான் இன்னும் பயத்தில் இருக்கிறளோ என நினைத்து அவனும் அவளின் வண்டியின் பின்னால் சென்று அவளின் வண்டியின் முன் நிறுத்த மதுமிதா பயத்தில் சடன் ப்ரேக் போட்டு கவினின் முகத்தை பார்த்து பயத்தில் அவளின் முகம் வெளிறி போய்விட்டது.

அவளின் முகத்தை பார்த்து புரிந்துக் கொண்ட கவின் தன் மனதில் இருப்பதை இனியும் தாமதிக்காமல் சொல்லிவிடலாம் என முடிவு செய்தான்.

மதுமிதாவை பார்த்ததும்,

“ஹேய்.. யூ டோன்ட் வொரி.. நீ நெனக்கிற மாதிரி எதுவும் பண்ணமாட்டேன். சொன்னதும்” தான் அவளுக்கு உயிரே வந்தது. அவனே தான் பேச்சை தொடர்ந்தான்.

“ஏன் இப்படி பயந்து பயந்து ஓடுற.? உன்ன எதுவும் பண்ணமாட்டேன்.” சொன்னதும் மதுமிதாவிற்கு கவின் மீது ஒரு நன்மதிப்பு உள்ளுக்குள் எட்டி பார்க்க ஆரம்பித்தது.

“என் பேர் கவின். நீ நெனக்கிற மாதிரி நா போலீஸ் இல்ல.. நீ படிக்கிற இதே காலேஜ்ல தான் பிஜி படிக்கிறேன். நீ என்ன, ஏது, பாக்காம கை நீட்டி அடிச்சதும் உன்னைய பயமுறுத்தி பாக்க தான் அப்படி பொய் சொன்னேன்.”

என உண்மை சொன்னதும் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் மதுமிதா எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தாள்.

“அன்னிக்கு ஈவினிங் கூட என்னைய பாத்தும் ஒரு சாரி கூட சொல்லாம போனேன் தான் உன்னைய ஓவர் டேக் பண்ணி வந்து பேசினேன்.

நீ சாரி கேட்டு இருந்தா அப்பவே ப்ராப்ளம் முடிஞ்சிருக்கும்.. நீ சாரி கேக்காம இருந்தது கால்ல விழ சொன்னப்ப விழாம இருந்தது எல்லாம் ஒரு விதத்துல நல்லது.. நா சொன்னது எல்லாம் பண்ணியிருந்தா இப்ப உன்னைய மீட் பண்ணி பேச வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்காது.

எதுவும் நடக்காமலே இருந்திருக்கும்” என அவனின் மனதில் இருப்பதை முழுவதும் வெளிப்படையாக சொல்லாமல் ஒருவித மறைமுக பாணியில் சொல்லிக் கொண்டிருந்தான் கவின்..

ஆனாலும் மதுமதாவின் மனநிலையை இன்னும் மாறவில்லை என்பதை அவளின் முகமே காட்டி கொடுத்தது. இன்னும் அதே பயந்த மனநிலையுடனே தான் சுற்றியிலும் யாராவது வருகிறார்களா என பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் நிலைமை பார்த்த கவின்,

“ஹலோ.. இஃப் யூ டோன்ட் மைன்ட் உனக்கு என்ன பிரச்சனை சொல்ல முடியுமா?” கேட்டான். மதுமிதா அதற்கும் பதில் எதும் சொல்லாமல் அப்படியே அமைதியாக இருந்தாள்.. அவள் அமைதியாக இருந்ததும் கவினும் அதற்கு மேல் வற்புறுத்தி கேட்கவில்லை.

“சரி.. உன் பிரச்சனை என்னானு சொல்ல வேண்டாம். பட் நா பண்ண வந்ததை பண்ணிட்டு போய்டுறேன்” சொன்னதும் அதுவரை அமைதியாக இருந்த அவளின் இதயம் பயத்தில் லப்டப் என வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“நீ அடிச்சதுக்கு கால்ல விழ சொன்னேன். இப்ப அதலாம் எதுவும் நீ பண்ண வேண்டாம். பட் அதுக்கு பதிலா நா ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணிட்டு போய்டுறேன்” என்றான்.

அவன் இப்படி அடுத்த முறையும் சொன்னதும் மதுமிதாவிற்கு தான் அடித்ததற்கு தன்னை மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அவளுக்கு இருந்த பயத்தில் எதுவும் பேசாமலே இருந்தாள். அதை பார்த்த கவின்

“என்ன மது. நா மட்டும் பேசிட்டே இருக்கேன். நீ எதுவும் பேசமாட்ற? இன்னும் பயத்திலே இருக்க. அதான் உன்ன எதுவும் பண்ணமாட்டேன் சொல்லிட்டு தான பேசவே ஸ்டார் பண்ணேன். அப்படி இருந்தும் நீ இன்னும் பயந்திட்டே இருக்க..” கேட்க

மது, “அப்படியெல்லாம் இல்ல நீ என்ன பண்ண வந்திங்க” பயத்தில் தயங்கிட்டே கேட்க கவினின் மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம்..

“அத எப்படி பண்றது தெரியல மது.. அதான் யோசிச்சிட்டே இருக்கேன்.. பப்ளிக் வேற நின்னுட்டு இருக்கோம்.. அதான்..” அவனும் இழுக்க.. மதுமிதாவிற்கு பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.. இருந்தாலும் அவனிடம் இருந்து தப்பிக்க

“பரவாயில்ல சொல்லுங்க.. ச்சீ பண்ணுங்க..” சொல்ல

“இல்ல மது இத பண்ணவும் செய்யனும்.. வாயால சொல்லவும் செய்யனும்” பீடிகையா போட்டான்.. அதற்கு மேல் பொறுமையை இழந்த மதுமிதா

“நா அடிச்சதுக்கு நடுரோட்டுல நிக்க வச்சு கட்டிபிடிக்கனுமா?” கத்த

“ஹேய்.. கூல்.. டோன்ட் பி அங்கிரி.. நீ நெனக்கிற மாதிரி எல்லாம் இல்ல” சொன்னதும் அவள் கொஞ்சம் அமைதியானாள்..

“உன் இனியும் டென்சன் பண்ண விரும்பல.. என்னைய கை நீட்டி அடிச்சதும் உன் மேல கோவம் இருந்தது. ஆனா அடிக்கும் போது இருந்த அந்த தைரியம் புடிச்சிருந்தது.

அதுனால தான் உன் கண்ண பாத்ததும் அதுல மயங்கி அன்னிக்கு உன் கன்னதுல முத்தம் குடுத்தேன்.

அன்னிக்கே உன்ன முழுசா பாத்ததும் என் முழு மனசையும் உன்கிட்ட குடுக்கனும் முடிவு பண்ணிட்டேன்.

எஸ்.. மது.. நா இப்போ ப்ரோப்ஸ் பண்ண போறேன்.. ஐ லவ் யூ.. மது மீ தா..” என ஒரே மூச்சில் தன் மனதில் இருந்ததை சொல்லி முடித்தான்.

இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *