Skip to content
Home » மது மீ தா – 3

மது மீ தா – 3

மது மீ தா – 1

மது மீ தா – 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

சங்கவி அதன் பின் அந்த நிகழ்வை விட்டு வெளியே வந்து கவின் மற்றும் அவனுடைய நண்பர்களோடு ஐயிக்கியம் ஆகி கொண்டாள்.

அவர்களுடனே சேர்ந்து கேன்டினுக்கு சென்று தேவையானதை வாங்கிக் கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் உட்காந்து சாப்பிடபடி அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

சங்கவியும் அவர்களுடன் சேர்ந்து நன்றாக தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.

அந்த அரட்டைகளுக்கு நடுவில் பக்கத்தில் சுற்றியிருக்கும் ஏதோ பெண்கள் கூட்டத்திடம் இருந்து கவினை பற்றி பேச்சு மீண்டும் சங்கவியின் காதுகளுக்கு மெதுவாக வந்து சேர அவள் மறுபடியும் வேறொரு உலகத்திற்குள் சென்று லயிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு இவர்கள் பேசும் பேச்சு எதுவும் கேட்கவில்லை. கவினை பற்றி அந்த பெண்கள் பேசும் வார்த்தைகள் மட்டும் காதுக்களுக்குள் சென்றுக் கொண்டிருந்தன.

“ஏய்.. அங்க பாருடி.. கவின் திரும்பி இதே காலேஜ்க்கு வந்து இருக்கான்..”

“ஆமாடி.. வந்தது சந்தோஷமா இருந்தாலும் என்ன யூஸ் டி. அவன் தான் வேணாம் சொல்லிட்டானே..”

“ம்ம்.. ஆமாடி.. இருந்தாலும் அவன மாதிரி ஒருத்தன சைட் அடிக்கிறதே ஒரு தனி கிக் தான் டி..”

“நாமனால சைட் மட்டும் தான் அடிக்க முடியும்.. வேற என்ன பண்ணிட முடியும்.. ஒரு கிஸ் கூட அடிக்க முடியாது..”

“ம்ம். நீ சொல்றது கரைக்ட் தான்டி. அட்லீஸ்ட் அவன் பக்கத்திலயாவது உட்காந்து அவன் மேல இருந்து பாடி ஸ்மெல்யாவது ஸ்மெல் பண்ணனும்டி..”

“பாத்துடி.. நீ இருக்குற வேகத்த பாத்தா நீயே போய் அவன் மேல பாஞ்சிடுவ போல..”

“அந்த அளவுக்கு தைரியம் வந்தா நல்லாதான்டி இருக்கும்.. இல்ல. ஹாலிவுட் மூவில காட்டுற மாதிரி அவன மயக்குறதுக்கு ஏதாவது சூப்பர் பவர் இருந்தா சூப்பரா இருக்கும்டி..”

“நீ சொல்றத பாத்த அந்த பவர் இருந்தா மேரேஜ் பண்ணாமலே மேட்டர் பண்ணி குடும்பம் நடத்துவ போலேயே..”

“இப்ப கூட அவனோட டிரீம்ல குடும்பம் நடத்திட்டுதான்டி இருக்கேன்” சொல்ல

இங்கு சங்கவிக்கு திரும்பி குப்பென்று வியர்த்தது.. இதுவரை சங்கவி பேசாததால் எல்லாரும் இவளை பார்க்க முகம் எல்லாம் வியர்த்திருந்தது. அதை பார்த்த கவின்,

“ஏய் சங்கவி.. என்ன ஆச்சு உனக்கு.. வந்தா ஃபர்ஸ்ட் டே இப்படி திங்க் பண்ணிட்டே இருக்க.. உன்ன பத்தி திங்க பண்ணா கூட பரவாயில்ல.. எனக்கு லவ் ப்ரோப்போஸ் பண்ணத பத்தி நா கூட இவ்வளவு டீப்பா திங்க் பண்ணதில்ல.. ஜெஸ்ட் லீவ் இட்..” சொல்ல

“என்ன?”

“ஜெஸ்ட் லீவ் இட்.. இன்னும் அதே திங்க் பண்ணிட்டு இருக்காத..”

“நானும் திங்க் பண்ணாம இருக்கனும் தான் நெனக்கிறேன். ஆனா முடியல. அதை மீறி கன்ட்ரோல் இருந்தாலும் இங்க இருக்குற கேர்ல்ஸ் உன்ன பத்தி பேசுறது உனக்கு தெரியுமா? இல்ல எல்லாம் தெரிஞ்சும் எதும் தெரியாத மாதிரி இருக்கிறியா?” அவளுக்குள்ள கேட்டு பார்த்து பேசிக் கொண்டாள்.

கவின் அதை பற்றி நினைக்காமல் இருக்க சொன்னாலும் சங்கவியின் மனம் திரும்ப திரும்ப அந்த நிகழ்வையே தான் சுற்றி சுற்றி வந்தது. அன்று அவர்களின் கிளாஸிலும் அவளுக்கும் அதே நியாபகயாகவே இருந்தது.

அவளையும் அறியாமல் அவனின் மீது ஒரு ஆர்வம் வந்திருந்தது. அது அவன் மீதான ஈர்ப்பா?, இல்லை காதலா? என சொல்ல தெரியாத அளவுக்கு சங்கவியின் மனதை கவின் ஆட்கொண்டு இருந்தான்.

அந்த நினைப்பே அவளுக்கு ஒரு புதுவித உணர்வையும் உற்சாகத்தையும் குடுத்தது.

அடுத்து நடக்க போகும் நிகழ்வுகளை பற்றி தெரியாமலே கவின் பற்றிய சுகமான நினைவுகளுடனே அன்றைய பொழுது சங்கவிக்கு முடிந்தது..

………………………………………………………………

மறுநாள்

இன்று கவின் வாழ்வில் நடக்கும் நிகழ்வை பற்றி எந்த கவலையும் இல்லாமல் உற்சாகமாக காலையில் கவின் எப்போதும் வழக்கம் போலவே எழுந்து கிளம்பி காலேஜ்க்கு வண்டியில் வந்துக் கொண்டிருந்தான்.

அவன் வரும் வழியெல்லாம் அவனுக்கு பிடித்த காதல் பாடலை முனுமுனுத்துக் கொண்டே வருவது வழக்கம். அன்றும் அது போல தான் முனுமுனுத்துக் கொண்டே வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தான்.

திடீரென போடபட்ட சிக்னலினால் அவன் சடன் பிரேக் போடபட வேண்டிய கட்டாயம் ஏற்பட கவினும் உடனடியாக ப்ரேக் போட அது முன்னால் நின்றுக் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டி மீது மோதியது.

அந்த ஸ்கூட்டியில் இருந்து ஆரஞ்சு கலர் சுடிதார் போட்ட பெண் வந்து இறங்கி வந்து அவளின் கெல்மட்டை முழுமையாக தூக்கிவிடாமலே

“ஏய் மிஸ்டர்..” சொல்ல

இவனோ கனவுலகத்தில் காதல் பாடல்களை பாடிக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் முன்னால் இருவிரலை சேர்த்து சுடக்கு போட்டு கூப்பிட இந்த உலகத்திற்கு வந்து,

“வாட்..?”

“கொஞ்சம் கெல்மட்டை கலட்டிறீங்களா?” கேட்க..

“ம்ம்.. ஓகே பட்.. ஒய்?”

“பர்ஸ்ட் கலட்டுங்க.. உங்களுக்கே புரியும்” சொல்ல

கவினும் அவனுடைய கெல்மட்டை கலட்ட அவனுடைய கன்னத்தில் அரைவிட்டாள்..

“ஏன்டா காலையிலே கனவு கண்டுட்டு வந்து வண்டியில இடிப்ப.. இடிச்சிட்டு சாரி கூட சொல்லாம சாங்க் பாடி இருப்ப” கத்த..

கவின் வண்டியில் இருந்தபடியே எழுந்து அவளின் வண்டியை பார்க்க பெரிதாக எந்த ஒரு டேமேஜ் இல்லாமல் இருந்ததை பார்த்ததும்…

“ஹலோ என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க.. உன் வண்டிக்கு தா ஒன்னும் ஆகலேல.. பின்ன ஏன் ரோட்டுல நின்னுட்டு பிரச்சனை பண்ணிட்டு திரியுற..”

“யாரு.. நானா பிரச்சனை பண்ணிட்டு திரியுறேன். உன்ன மாதிரி ஆளுங்க தான் டெய்லி வந்து என் உயிர் எடுக்க வரீங்க..” சொல்ல

கவினுக்கு உடனே நேற்று காலையிலும் இதே சிக்னலில் நடந்த பிரச்சனை நியாபக்ததிற்கு வந்தது.. உடனே..

“ஏய்.. இங்க பாரு..”

“என்ன?”

“நேத்து காலையில இதே சிக்னல இதே மாதிரி ஒருத்தன கை நீட்டி அடிச்சவ தான” கேட்க அவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் வந்து எட்டி பார்த்தது.. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காமல்

“அதலாம் இல்லையே.. நீ.. நீங்க பேசுறது பொய்.. ஒரு பொண்ணுட்ட இப்படி நின்னு பேசுறது நல்லால..” சொல்லிவிட்டு அவள் நகர்ந்து செல்ல

உடனே கவின், “ஏய் நில்லு..” கத்த அவளும் உடனே நின்றாள்..

“உன் ஸ்கூட்டிக்கு எதாவது டேமேஜ் ஆகியிருக்கா பாரு” சொல்ல அவளும் பார்த்துவிட்டு தலைக்குனிந்தவாறே மெதுவாக ‘இல்ல’ என்றாள்..

“பின்ன எதுக்கு கை நீட்டி, அதுவும் ஒரு ஆம்பளைய இப்படி பக்ளிக்கா வச்சு அடிச்ச” கேட்க

“நா ஒன்னும் சும்மால அடிக்கல.. பின்னால வண்டிய வந்து இடிச்சதுக்கு தான் அடிச்சேன்..”

“வண்டிய தான இடிச்சேன்.. அது இப்படி தான் கைய நீட்டி அடிப்பியா?” கேட்க அதற்கு அவள் எதுவும் செல்லாமல் அமைதியாகவே இருந்தாள்..

கவினோ, “ஏதோ அவள பின்னாடி வந்து இடிச்சது மாதிரி அடிக்கிறா” முனுமுனுத்துக் கொண்டே இருந்தான்..

“ஹலோ.. என்ன பேசுறீங்க..”

கவினுக்கு இவள் செய்தற்கு பதிலுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என நினைத்தான். திடீரென்று வந்த யோசனையில் இவளை பயமுறுத்தி பார்க்க வேண்டும் என முடிவு செய்தான்..

“நீ அடிச்சது யார தெரியுமா?”

“யாரா இருந்தா என்ன? வண்டிய இடிச்சதுக்கு அடிச்சேன்..”

“ம்ம்.. நா இந்த ஏரியாவுக்கு வந்திருக்க புது எஸ்.ஐ. இனி தான் டியூட்டில ஜாயின் பண்ண போறேன்..” சொல்ல

உண்மையிலே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

அவளையும் அறியாமலே பயத்தில் தலையில் இருந்த கெல்மட்டை கலட்ட கவினோ அவளின் முகத்தை பார்க்காமல் அவனை காந்தம் போன்ற இழுத்த அந்த கண்ணை மட்டும் பார்த்ததும் அவளின் தலையை பிடித்து இழுத்து கன்னத்தில் உதட்டை பதித்து அழுத்தமாக முத்தமிட்டான்..

அவளுக்கோ அதிர்ச்சி.. இவனுக்கோ ஆனந்தம்.. தான் எதிர்பார்த்த மாதிரியே ஒருத்தியை பார்த்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் அவளின் கண்ணை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் இரண்டரை நிமிட சிக்னல் முடிந்து கிரீன் சிக்னல் விழுக இவளும் சுதாரித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு முன்னால் செல்ல கவினும் அவளின் பின்னாடி சென்று அவளிடம்,

“என்னைய அடிச்சதுக்கு உன்ன வந்து அரஸ்ட் பண்ணி உள்ளாற வைக்கிறேன்” சொல்லிவிட்டு அவளின் வண்டியின் பின்னாலே சென்றான்.

கவின் அப்படி சொன்னதும் இவளுக்கு இன்னும் பயம் அதிகமாக வந்து தொற்றிக் கொண்டது. அந்த பயத்துடனே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தாள்.

அவ்வப்போது அவளின் சைடு மிரரில் அவனின் வண்டி எதுவும் தன்னை ஃபாலோ செய்து வருகிறதா என ஒரு பார்வை பார்த்தாள்..

கவினும் அவளின் வண்டியின் பின்னாலே தான் ஃபாலோ செய்து வந்துக் கொண்டிருந்தான்.. அந்த பெயர் தெரியாத பெண்ணின் முகத்தை அவள் ஸ்கூட்டியின் மிரரில் பார்க்க முகத்தில் ஷாலை வைத்து கட்டியிருந்தாள்.

அந்த மெல்லிய ஷாலில் அவளின் முகம் போலீஸ் என சொன்னததால் பயத்தில் மிரண்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

அவளின் பயந்த முகத்தை பார்க்கும் போது கவினுக்கு சிரிப்பு தான் வந்தது. அவளையும் அவளின் பயந்த முகத்தை பார்த்துக் கொண்டே கவினும் வண்டியை ஓட்டினான்..

அவளின் முகம் பயத்தில் வியர்த்திருந்தது. அவளுக்குள் இருந்த பயத்தினால் அவளால் ஒழுங்காக வண்டியை ஓட்ட முடியவில்லை.

ஒரு இடத்தில் பயத்தில்ல வண்டியை ஒழுங்காக பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறி விழுக போனாள்.. கவின் உடனே சுதாரித்து அவளையும் வண்டியை பிடித்து நிறுத்தினான்.

கவின் கை அவனுக்கு பிடித்த பெண்ணின் பரிசத்தின் மேல் பட்டதும் அவனின் மனது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது..

கவின் அந்த பெண்ணை பார்த்து,

“நா சொன்னத நெனச்சிட்டே நீ வண்டிய எங்கையும் போய் மோதிடாத..” அக்கறையில் சொல்ல

அவள் உடனே, “அப்ப என்ன அரஸ்ட் பண்ணமாட்டிங்கள” ஒரு உற்சாக முகத்துடன் கேட்க,

கவின், “அது எப்படி உடனே சொல்ல முடியும்.. நீ நடந்திக்கிறத பொறுத்து தான் சொல்ல முடியும்.. உன்ன டெய்லி வாட்ச் பண்ணுவேன்.

நா வரலேனா டிப்பார்டெமெண்ட் ஆளுங்க சர்வைலென்ஸ்ல இருப்பாங்க. கேர்ஃபுல்.” சொல்ல உடனே அவளின் முகத்தில் வந்த உற்சாகம் வந்த வேகத்திலே காணாமல் போய்விட்டது..

கவின் சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் அவளின் காதில் வந்து திரும்பி திரும்பி ஒலித்துக் கொண்டிருந்தது. அதனாலே ஒருவித மன பயத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு காலேஜை வந்து அடைந்துவிட்டாள்.

அவளின் காலேஜ் அருகில் கவினை மீண்டும் பார்த்தும் பயத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சத்தமாக ஹாரன் அடிக்க கவினும் திரும்பி பார்க்க அதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் தான் படிக்கும் காலேஜ்க்குள் செல்வதை கவினும் கவனித்துவிட்டான்..

இனியும் இந்த காதல் பயணம் தொடரும்..

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

3 thoughts on “மது மீ தா – 3”

  1. ungala pola sex kathai ezhuthalar kedaipathu romba kastam. romba arumaiya emotional + sex feel koduthu ezhutharinga.. nalla pannunga epavum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *