Skip to content
Home » மது மீ தா – 5

மது மீ தா – 5

மது மீ தா – 1

மது மீ தா – 2

மது மீ தா – 3

மது மீ தா – 4

Kamakathai – சென்ற பகுதியின் தொடர்ச்சி..

தீபிகாவுடனான பேச்சு தொடர்கிறது…

“ஏய் கத்தாதடி.. யாரு காதுலையும் விழுந்தா பிரச்சனை ஆகிடும்டி..”

“ஹேய்.. பிரச்சனை பண்ணது நீ தான்டி.. நா கத்துறத பெருசா சொல்ற..”

“ஓகே.. உன் ஓட்ட வாயை கொஞ்சம் மூடு. என்ன நடந்துச்சு சொல்றேன்..”

“ம்ம். சொல்லு.. என்னத்த சொல்ல போறீயோ? காலையிலே கேட்டேன் நீ ஒன்னுமில்ல சொல்லி முறைச்சு பாத்த அதான் விட்டுட்டேன். சரி இப்ப சொல்லு என்னானு.?”

“நேத்து மாதிரியே இன்னிக்கு காலையில அதே சிக்னல்ல ஒருத்தன் வண்டியில வந்து என் வண்டிய இடிச்சிட்டான்டி.. நானும் அவன்ன கன்னத்துல அடிச்சிட்டேன்டி..”

“ம்ம்.. உன் பிரச்சனை இது தானா.. நா கூட வேற எதாச்சும் புதுசா சொல்வியோ நெனச்சேன்.. நேத்தும் இததான் சொன்ன.. என்ன ஒரு டிப்பரன்ஸ் நேத்து சந்தோஷமா சொன்ன.. இன்னிக்கு கொஞ்சம் சோகமா சொல்ற.. ஒருவேள நா பண்ணின அட்வைஸ்ல எதுவும் திருந்திட்டியோ?”

“அய்யோ.. முழுசா கேளுடி பன்னி முதல்ல..”

“சரி சொல்லு.” சொல்லிவிட்டு தீபிகா சாப்பிட ஆரம்பித்தாள்..

“அட பன்னி.. நா எவ்ளோ சீரியஸ்ஸான விசயத்தை பத்தி பேசிட்டு இருக்கேன். நீ தின்னுட்டு இருக்க..”

“நீ சொல்லுடி கேட்டுட்டு தான் இருக்கேன்.. எனக்கு பசிக்குது. திங்கிறேன்.. உனக்கும் பசிக்குல நீயும் சாப்பிட்டே சொல்லு..” தீபிகா சொல்ல

அவளின் சாப்பிடும் கையை பிடித்து நிறுத்தி, “நா சொல்றத முதல்ல கேளு எரும.. இன்னிக்கு என் வண்டிய இடிச்சது போலீஸ் தெரியாம கன்னத்துல அடிச்சிட்டேன்டி..” சொல்ல

தீபிகா, “என்னது? போலீஸ்ஸ கை நீட்டி கன்னத்துல அடிச்சிட்டியா!” கத்தினாள்.

“ஏய் மறுபடியும் கத்தாதடி.. உன்கிட்ட சொன்னா ஏதாவது ஐடியா குடுப்ப பாத்த.. நீயே கத்தி எல்லாருக்கும் தெரியுற மாதிரி பண்ணிடுவ போல.”

“ஏய். நெஜமாவே போலீஸ்ஸ தான் அடிச்சியா? இல்ல என்ன கலாய்க்க எதுவும் பொய் சொல்றீயா?”

அட லூசு.. நானே பிரச்சனைல மாட்டிட்டு இருக்கேனு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.. இப்ப உன்ன கலாய்க்குறது தான் முக்கியம் பாரு.. பொய் எல்லாம் சொல்லல.. உண்மைய தான் சொல்றேன்டி.. ஏதாவது ஐடியா குடுடி..

“ஐடியாவா?”

“ம்ம்.” வேகமாக அவள் தலையை ஆட்ட

தீபிகா, “அட போடி.. ஐடியா எங்கன வருது. நீ சொல்றத பார்த்த அடிவயிறு எல்லாம் கலக்குற மாதிரியே இருக்கு.. கேக்குற எனக்கே இவ்வளவு பயமா இருக்கு..”

“ஏய் நீ செல்லம்ல.. பிளீஸ்டி ஏதாவது ஐடியா குடுடி.. ஈவினிங் டிரிட் கூட தரேன்..”

“ஆமா அடிச்சது போலீஸ் சொல்ற.. யூனிபார்ம் போட்டது கூடவா கண்ணுக்கு தெரியல உனக்கு..”

“அட லூசு.. யூனிபார்ம் போட்டுருந்த நா ஏன் டி கை நீட்டி அடிக்க போறேன்.. யூனிபார்ம் போடலடி. வண்டிய இடிச்சதும் கெல்மட் கலட்ட சொல்லி அடிச்சிட்டேன்டி..”

“நல்லா அடிச்ச போ.. சரி.. போலீஸ் வண்டினா போலீஸ் எழுதியிருக்கும்.. அதையும் கவனிக்கலையா?”

“இல்ல டி.. கவனிக்கல. அவனும் அடி வாங்கின பிறகு தான் போலீஸ் சொன்னான்..”

“என்னது அவனா?”

“ம்ம்.. ஆமா டி பாக்க வெரி யெங்கா கேன்சம்மா கூட இருந்தான்டி..”

“இப்ப இது ரொம்ப முக்கியம் பாரு.. சரி அடுத்து வேற என்ன நடந்துச்சு சொல்லு..”

“அடுத்து சிக்னல் விழுந்ததும் பயத்துல வண்டிய எடுத்திட்டு வந்துட்டேன்.”

“ம்ம்.. அந்த போலீஸ் உன்ன ஃபாலோ பண்ணி எதுவும் வந்தாரா?”

“ம்ம்.. ஆமா” மெதுவாக தலையை ஆட்ட

“என்னடி சொல்ற?”

“ஆமாடி பின்னாடியே வந்தார்.”

“சரியா போச்சு..”

“அதுக்கு நீ என்னா பண்ணின?”

“நா ஒன்னும் பண்ணலடி.. வண்டி பேலன்ஸ் பண்ணா முடியாம கீழ விழுக போனப்ப அந்த போலீஸ் தான் வந்து கெல்ப் பண்ணார்..”

“ஓ.. அப்ப நல்ல போலீஸ் போல..” தீபிகா சொல்ல

“நானும் அப்படி நெனச்சுதான்டி அரஸ்ட் எல்லாம் பண்ணமாட்டிங்கள கேட்டேன்..”

“ம்ம்ம்.. என்ன சொன்னார்டி” தீபி ஆர்வமாக கேட்க

“நீ நடந்துக்கிறத பொறுத்து சொல்லிட்டார்டி.. அதுமட்டுமில்ல டி நம்ம காலேஜ்க்கு வெளியில ஆப்போசீட்ல பைக் வச்சிட்டு வேற நின்னுட்டு இருந்தார்டி.. நா வேற அவர பாத்ததும் பயத்துல ஹாரன் வேற சத்தமா அடிச்சு தொலைஞ்சிட்டேன்.. இப்ப என்னைய கவனிச்சு பாத்தாரா? இல்லையா? கூட தெரியலடி..”

“சரியா போச்சு.. இது வேறையா?”

“ம்ம்.. ஆமாடி. இப்ப என்ன பண்றதுடி.. ஏதாவது நல்ல ஐடியாவா குடுடி..”

“பிரிஸ்டேஜ் பாக்காம போய் அவர் கால்ல விழுந்துருடி..”

“என்னது கால்ல விழுகனுமா?”

“பின்ன நீ பண்ணதுக்கு இதுவே கம்மி.. உன் வண்டிக்கு ஏதாவது டேமேஜ் இருக்கா?”

“இல்லடி..” தலைக்குனிந்துக் கொண்டே சொல்ல

“பின்ன எதுக்குடி கைய நீட்டுன.?”

“ம்ம்.. வண்டிய இடிச்சதுக்கு தான்டி.”

“ஏன்டி.. வண்டிய தான இடிச்சாங்க.. ஏதோ உன்னையே இடிச்ச மாதிரி அடிச்சிட்டு வந்துருக்க.”

“ஏய், நீயும் என்னடி இப்படி சொல்ற.?”

“வேற எப்படி சொல்ல சொல்ற.. யாரு என்னனு பாக்காமலே கைய நீட்டிட்டு இப்ப என்ன பண்றது ஐடியா மட்டும்
கேட்குற.. சரினு நானும் ஐடியாவும் குடுத்திட்டேன்..”

“கண்டிப்பா கால்ல விழுகனும்மா?” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

“ம்ம். ஆமா உனக்கு வேற ஆப்சனே இல்ல.. சரிடி எனக்கு பசிக்குது.. நா சாப்பாடுறேன்” சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் தீபிகா சாப்பிட ஆரம்பித்தாள்..

“ஹேய்.. என்னடி சாப்பிடுற..”

“ம்ம்.. எனக்கு பசிக்குதுடி. அதான் சாப்பிடுறேன். உனக்கே தெரியும்ல நா பசி தாங்கமாட்டேன்னு.. நீயும் சாப்பிடுடி..”

“அப்ப ஐடியா?” இழுத்துக் கொண்டே கேட்க..

“அதான் சொல்லிட்டேன்ல அதுதான்.”

“நீ வேணா இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம் சொல்லு..”

“அதான்டி எனக்கும் என்ன பண்றதுனே தெரியல..”

“அப்போ நா சொன்னத பண்ணிடு.”

“நா வேணா அந்த போலீஸ்ஸ பாத்த அடிச்சதுக்கு சாரி கேட்டுடவாடி.”

“நீ இந்த சாரி சிக்னல் வச்சே கேட்டு இருக்கனும்.. டூ லேட்..”

“ஓ.. ஐ சி..”

“நீ ஒரு கெல்ப் பண்றியாடி..”

தீபிகா சாப்பிட்டுக் கொண்டே என்னானு தலை ஆட்டிக் கொண்டே கேட்க

“ஈவினிங்க் எப்படியும் பஸ்ல தான வீட்டுக்கு போவ..”

“டு டே நா உன்ன உன் வீட்டு வாசல் வந்து ட்ரா பண்றேன்டி.. நீ டு டே ஈவினிங்க் மட்டும் கூட வா டி..”

தீபிகா சாப்பாட்டை முழுங்கி விட்டு “என்னது! நானும் உன் கூட வரனுமா?

“ம்ம்.. ஆமாடி.. பிளீஸ் டி செல்லம்ல.. அதான் சொன்னேன்ல டி ஈவினிங் டிரிட் கூட தரேன்..”

“சரி வரேன்.. ஆனா ஒரு கண்டிஷன்..”

“என்னடி கண்டிஷன்லா போடுற.?”

“கேளுடி முதல்ல.. அவர பாத்ததும் ரோடு கூட பாக்காம ஈகோ இல்லாம கால்ல விழுந்திடனும்.. அவரு என்ன பேசினாலும் நீ அமைதியா தான் இருக்கனும். கோவப்பட கூடாது.. இதுக்கெல்லாம் ஓகே நா வரேன்..”

“சரி டி.. கால்ல விழுந்தா பிரச்சனை எதுவும் வராதுல.”

“அதான் கூட வரேன்ல நா பாத்துக்கிறேன்.. ஆனா நா சொன்ன மாதிரி நடந்துக்கனும்..”

“ம்ம்.. சரிடி..”

“சரி.. இப்ப சாப்பிடுடி.. ஈவினிங் பாத்த உன் ப்ராப்ளம் சால்வ் பண்ணிடலாம்.. கூல் டி..” தீபிகா சொல்ல

அவள் மனமில்லாமல் டிபன்பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்தாள். தீபி கூட வருவது ஒருவித தைரியமான ஆறுதல் என்றாலும் அந்த போலீஸ்க்கு பயந்து பின்வாங்கினாலும் ஆச்சரியமில்லை..
அவள் கூட வருகிறேன் சொன்னதே பெரிய விசயம்.. சாய்ந்தரம் நடக்க போவதை அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.. இருந்தாலும் அவளின் மனதில் முழுமையாக பயம் நீங்கவில்லை.

கவின் எப்படியோ இவளிருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தன்னை பற்றி தான் பேசுவார்கள் என நன்றாக தெரியும்.. தூரத்தில் இருந்து பார்ப்பதினால் அவர்கள் பேசுவது கவினால் கேட்க முடியவில்லை என்றாலும் அவளின் முகத்தை வைத்தே இன்னும் பயத்தில் தான் இருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொண்டான்.. அவளை பார்க்கும் போது கவினுக்கு பாவமாக இருந்தாலும் அவள் செய்ததற்கு ஒரு சாரி கூட கேட்காமல் திமிராக இருந்ததால் தான் அவளை பயமுறுத்தி பார்க்க வேண்டும் என நினைத்து அதையும் இப்போது செய்துவிட்டான்.. அவள் எப்படியும் தன்னை பார்க்கும் போது தன்னை தேடி வருவாள் என இவனுக்கு நன்றாக தெரியும்…

அன்று மாலை…

தீபியுடன் அவளும் வண்டியில் காலேஜை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இருவரும் வரும் போதே கவின் வண்டியை வைத்துக் கொண்டு வெளியே இவளுக்காவே நின்றுக் கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் மீண்டும் மனதில் ஒரு பயம் வந்து அவனிடம் பேசாமே அவனை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்..

இந்த முறை தன்னை பார்த்தும் வந்து ஒரு சாரி கூட சொல்லாமல் கவின் கடுப்பாகி அவளுடைய ஃபாலோ செய்து கொண்டு போனான்.. அது அவளுக்கு தெரிந்து அவளும் வேகமாக வண்டியை ஓட்டினாள்..

தீபி, “ஏன்டி வண்டிய வேகமாக ஓட்டுற.. மெதுவா போ டி..” என்று சொல்ல

“ஹேய்.. அந்த போலீஸ் காலேஜ் முன்னாடி தான் இருந்தான்.. அவன பாத்ததும் பயத்துல வந்துட்டேன் டி.. இப்ப பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வரான்டி..”

“ஏய் லூசா டி நீ.. உன்கிட்ட அவ்ளோ சொல்லியும் கேட்காம இப்படி பண்ணிட்டு இருக்க..”

“பயமா இருந்துச்சுடி.. அதான்டி வந்துட்டேன்..”

“போ டி.. பன்னி.. வண்டிய ஃபர்ஸ்ட் ஸடாப் பண்ணுடி.” தீபி கத்தியதும் வண்டியை நிறுத்தினாள்..

தீபி, “வந்தா சாரி கேட்டு கால்ல விழுந்துடு.. இங்க சுத்தி யாரும் இல்ல.” என்றாள்..

அவள் வண்டியை நிறுத்திய அடுத்த வினாடியே கவினும் அவள் வண்டியை ஓவர் டேக் பண்ணி நிறுத்தினான்..

“ஹேய்.. ஸ்கூட்டி.. என்னைய பாத்ததும் தான் வேகமா வந்த” கவின் கேட்க

இவள் பயத்தில் எதுவும் பேசாமலே இருந்தாள்..

“ஏய்.. உன்ன தான் கேக்குறேன்.” அதட்டி கேட்க

பயத்தில் வேகமாக தலையை ஆட்டி “ஆமா” சொன்னாள்..

“ஒரு சாரி கூட கேட்காம உன் பாட்டுக்கு வண்டிய ஓட்டி வந்தா என்ன அர்த்தம்..”

தீபி பின்னாடி இருந்து “அதான் கேக்குறார்ல சொல்லிடுடி.. பிரச்சனை முடிஞ்சிடும்..” சொல்ல

அப்போதும் அவள் அமைதியாக இருக்க தீபி பின்னாடி இருந்து சாரி கேட்க சொல்லிட்டே இருந்தாள்..

கவின், “ஏய்.. எல்லாரும் முன்னாடி அடிச்சிட்டு இப்ப சைலைண்ட்டா இருக்க.”

தீபியை கை காட்டி, “இவதான் உன்ன வேகமா போக சொன்னாளா?” கேட்க

தீபி பயத்தில் “ஐயா சார்.. நா போக சொல்லல சார். நா தான் சார் வண்டிய நிறுத்த சொன்னேன்.” பயத்தில் பதறிட்டே சொல்ல..

“நிஜமாவா?” கேட்க

“ஆமா சார்.. சத்தியமா சார். நம்புங்க சார்..” படபடவென சொல்ல..

“சரி நம்புறேன்.. இது ப்ரண்ட் தான சாரி கூட கேட்கமாட்டாளா?”

“இல்ல சார்.. அதலாம் கேட்பா”

அவளை பார்த்து “ஏய் கேளுடி பன்னி” முனுமுனுத்துக் கொண்டே இருக்க..

அவளும் “சாரி” முனங்கலாக சொல்ல

கவின், “ம்ம்.. கேக்கல.. சத்தமா சொல்லு” சொல்ல

அவளும் “சாரி” தலையை குனிந்துக் கொண்டே சத்தமாக சொல்ல

கவின், “சாரி சொன்ன பத்தாது.. இன்னொன்னு நீ பண்ணனும்.” சொல்ல அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. காலையில் சிக்னலில் அவன் முத்தம் குடுத்த மாதிரி இப்போது தன்னையும் எதுவும் குடுக்க சொல்வானோ? என பயந்தாள்..

அந்த பயத்துடனே என்ன? என்பதை போல கவினை பார்த்தாள்..

தன் காலை காட்டி, “நீ கால்ல விழுந்து சாரி கேட்கனும்” சொல்ல நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. ஆனால் அவளின் தன்மானம் காலில் விழுவதை தடுத்தது. அதனால் அவள் அமைதியாகவே இருக்க,

“ஏய் என்ன யோசிச்சிட்டே இருக்க?” கேட்க

“இல்ல வேற எதுவும் ஆப்சன் இல்லையா?” பயத்தில் விட்டு விட்டு கேட்க

கவின், “ஏய் இது என்ன உன் காலேஜ் கேக்குற குவிஸ்ட்டினா ஆப்சனோட குடுக்குறதுக்கு” கேட்க

அதற்கு அவள் அமைதியாக இருந்தாள்.. அவளின் பரிதாப நிலையை பார்த்து தன் காதலை நேரடியாக சொல்லாமல் தெரிவிக்கலாம் என முடிவு செய்தான்..

“சரி உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு.. அதனால எக்ஸ்ட்ரா ஒரு ஆப்சன் தரேன்” சொன்னதும் அவளின் முகம் பிரகாசமானது..

“சரி சொல்லுங்க” முதல் தடவையாக கவினை மரியாதை குடுத்து பேசியிருக்கிறாள்..

“நீ பண்ணின தப்புக்கு ஒன்னு என் கால்ல விழுனும் இல்லைனா..?” நிறுத்த

“ம்ம் சொல்லுங்க.”

“சொல்லிடவா” கேட்க..

“ம்ம்..” தலையை ஆட்ட

கவின், “இல்லைனா என்னைய காதலிக்கனும்” சொல்ல

“என்னது லவ் பண்ணனுமா?”

“ம்ம். ஆமா..”

“தி ஸிஸ் டு மச்” கோவத்தில் பொங்க..

“ஏய்.. அப்போ நீ ப்ப்ளிக்ல எல்லார் முன்னாடி அடிச்சது டு மச்சா தெரியலையா?” அதட்டலாக கேட்க அமைதியானாள்..

“உனக்கு வேற ஆப்சனை இல்ல.”

“நீ நெக்ஸ்ட் டைம் என்னைய பாக்கும் போது ரெண்டு ஒன்னு பண்ணியே ஆகனும்..” சொல்ல கொஞ்சம் நிம்மதி ஆனாள்..

“இப்ப நீ போலாம்” என்றான் கவின்..

திடீரென அவளை நிறுத்தி, “உன் பேர் என்ன?” கேட்டான்..

“எதுக்கு கேக்குறீங்க.?”

“நான சொன்ன மாதிரி கேக்கலேனா கேஸ் ஃபைல் பண்ண நேம் தெரியனும்ல அதான் சொல்லு” சொல்ல அவள் அமைதியாக இருந்தாள்..

அவள் பின்னாடி இருந்த தீபியை பார்த்து, “ஏய் நீ சொல்லு இவ நேம் என்ன?” கேட்க

அவள் பயத்தில் நடுங்கி கொண்டே “மது சார்.. மதுமிதா..” என்றாள்..

“சரி போங்க என்றான்..”

அவள் வண்டியில் உட்காருவதற்கு முன் இருவரையும் நிறுத்தி போலீஸ்க்கு ஒரு சலியூட் அடிச்சிட்டு போங்க சொல்ல தீபி பயத்தில் வேகமாக ஒரு சலியூட் அடித்துவிட இவள் மட்டும் அமைதியாக இருந்தாள்.. கவின் தீபியை பார்க்க

“ஏய் அடிச்சு விடு டி.. வீட்டுக்கு போகனும் நெனப்பு இருக்கா?” காதுக்குள் கத்த அவளும் மனமில்லாமல் சலியூட் அடித்தாள்..

இருவரும் வண்டியில் செல்லும் போது கவின், “ஏய்.. மது(நீ).. மீ(எனக்கு).. தா..” என சிரித்துக் கொண்டே கத்தி சொல்லிவிட்டு அவளுக்கு முன்னாடி வண்டியை ஓட்டி சென்றான்..

இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…

இந்த பகுதி பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

2 thoughts on “மது மீ தா – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *