சென்ற பகுதியின் தொடர்ச்சி..
கவின் அந்த பெண்ணின் ஸ்கூட்டியின் சைடு மிரரை தான் முதலில் பார்த்தான்.. அவன் அப்போது தான் அந்த பெண்ணின் முகத்தை முதன் முதலாக பார்க்கிறான். அந்த முகத்தை பார்த்த வினாடியே அவனின் மனதில் பதிய ஆரம்பித்தது. அவன் உடனே
“லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டவுடன் ஓடுறீயே யே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி” என மனதிற்குள்ளே வாய்விட்டு பாட ஆரம்பித்துவிட்டான்..
இந்த பாடலில் வரும் கோபிகாவை போல் அழகாக இல்லாவிட்டாலும் அவனின் மனதிற்கு அவள் ரதியாக தெரிந்தாள்.
அந்த கண்ணாடியில் தெரிந்த அவளுடைய மொத்த உருவம், அந்த கோவத்திலும், பயத்திலும் கலவரமடைந்த அந்த முகம், அதிலிருந்த காந்ததை போன்ற அவளுடைய கண்கள், அனைவரும் ஒருமுறையேனும் தொட்டு கிள்ளி பார்க்க தூண்டும் அந்த கன்னம், கோவத்திலும், பயத்திலும் துடிதுடித்துக் கொண்டிருந்த அந்த உதடும் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவனை கடந்து செல்வதற்குள் பார்த்து மயங்கிவிட்டான் கவின்.
மற்றவரின் பார்வைக்கு அவள் எப்படி தெரிவாள் என்றெல்லாம் கவின் யோசித்து பார்க்கவில்லை.
அவனின் கண்களுக்கு அவள் ராட்சசியாக முதலில் தெரிந்தாலும் அவளின் கண்களை பார்த்த பிறகு ரதியாக தெரிய ஆரம்பித்துவிட்டாள்.
அவளின் அங்க அழகில் மயங்கி அப்படியே தன்னிலை மறந்து ஒருவினாடி இன்னிலைக்கு சென்று வந்தான்.
பின்பு சுதாரித்தவன் தன்னுடன் இருந்த நண்பர்களிடம் சொல்லாமல் சிகரெட் அணைத்து தூக்கி எறிந்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு காலேஜிக்குள் சென்று அவளை சுற்றிலும் பார்த்தான் காணவில்லை.
எங்கே போயிருப்பாள் என யோசித்துக் கொண்டே இருந்த தருணத்தில் அவள் வண்டியில் வந்தது நியாபக்ததிற்கு வர பைக் ஸ்டாண்டிற்கு போய் பார்த்தான்.
அங்கு அவளின் வண்டி மட்டும் தான் இருந்தது. அந்த வண்டி நம்பர் ப்ளேட்டில் TN 72K 0143 என எழுதியிருந்தது.
அதை பார்த்ததும் அவனுக்கு பிடித்த அவளே வந்து கவின் ஐ லவ் யூ என சொல்வது போல் நினைத்து பார்த்து பின் சுதாரித்து தனக்கு தானே சிரித்துக் கொண்டான்..
இதற்கு முன் இதே காலேஜில் இதே பைக் ஸ்டாண்டில் வைத்து பல பெண்கள் கவினுக்கு ஐ லவ் யூ சொல்லி ப்ரோப்போஸ் செய்திருக்கின்றனர். ஏனோ அது எல்லாம் அவனின் மனதை போய் தொடவில்லை.
இன்னும் சொல்ல போனால் அந்த ஐ லவ் யூ எல்லாம் அவனின் காதிற்குள் கூட சென்றிருக்குமா என்பது சற்று சந்தேகம் தான்.
அவர்கள் எல்லாம் அவனுடைய அழகை பார்த்து அவனிடம் வந்து காதல் சொன்னவர்கள். அது எல்லாம் காதல் என்று சொல்லிவிட முடியாது.. ஒரு ஈர்ப்பு, ஆசை தான் தவிர வேறொன்றும் இல்லை.
ஆனால் இன்று சந்தித்த பெண் அப்படி இல்லை. கவின் இதற்கு முன் இவளை போன்று யாரையும் சந்தித்ததே இல்லை.
அவளுடைய பேச்சில் முதலில் கோவமடைந்தாலும் அடுத்து அவளின் கண்ணின் காந்த பார்வையில் மயங்கி அவளின் மனதில் (காதல்) கோல் போட தான் நினைத்தான்.
கவின் அந்த நினைப்புடனே கிளாஸ்ற்க்குள் சென்றான்.. பிஜி இரண்டாம் நாள் வகுப்பு என்பதால் கொஞ்சம் வகுப்புகள் ஆரம்பிக்கபட்டன.
அவன் வகுப்புகளை கவனித்தாலும் இடையிடையே அந்த பெயர் தெரியாத பெண்ணின் நினைவுகள் வந்து சென்றன.
அந்த ஸ்கூட்டியின் தைரியமான பேச்சு, பின் போலீஸ் என்று சொன்னதும் முகம் மாறி பயந்த அந்த முகம், பயத்தினால் அவளின் மனதிற்குள் ஏற்பட்ட அந்த பரிதவிப்பு, எல்லாத்தையும் நினைத்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவனையும் அறியாமல் தலையை ஆட்டி உதட்டை விரித்து சிரித்தான்..
கவின் திடீரென சிரிப்பதை பார்த்த திரு,
“டே என்னடா திடீர்னு நீயா சிரிச்சிட்டு இருக்க.. இதுவரை உன்ன நெனச்சு தான் இங்கிருக்கிற கேர்ல்ஸ் சிரிச்சிட்டு இருந்தாளுக.. இப்ப என்னடா நீ சிரிச்சிட்டு இருக்க?”
“அட ச்சீ நீ நெக்கிற மாதிரி இல்லடா” பொய்யை சொன்னான்..
“பின்ன எதுக்கு காலைல வந்ததுமே கனவு கண்டு சிரிச்சிட்டு இருக்க.?” கேட்க
“அது ஒன்னுமில்லடா.. உன்ன ஒரு பொண்ணு பப்ளிக்ல அடிச்சா என்ன பண்ணியிருப்ப?”
“என்ன பண்ணியிருப்பேன்.. கோவம் வந்து திருப்பி அடிச்சிருப்பேன்” என்றான் திரு.
“ஏன்டா கேக்குற.?” திரும்பி திரு கேட்க
“இல்ல இன்னிக்கு வரும் போது அது மாதிரி ஒரு பொண்ணு அடிச்சிட்டா..”
“அட அதுக்காடா இப்படி காலைல உட்காந்து கனவு கண்டு சிரிச்சிட்டு இருக்க..”
“டே.. முழுசா கேளுடா.. அவ அடிச்சதும் நா திருப்பி அடிச்சிருந்தா அப்பவே பிரச்சனை முடியாது.. அவள அடிச்சதுக்காக நாலு பேர் கூடி நம்மள அடிக்குறதுக்கே வருவானுங்க.. அதுனால தான் ஒரு ஐடியா பண்ணி பொய்ய எடுத்துவிட்டேன்..”
“அப்படி என்னத்த பொய்ய அவுத்துவிட்ட..”
“நீ அடிச்சது யாரு தெரியுமா? ஒரு போலீஸ்ஸ சொன்னதும் அவ முகத்த பாக்கனுமே பயத்துல அப்படியே வெளிரி போச்சு..”
“அடப்பாவி போலீஸ் ஏன்டா சொன்னா.. பின்னாடி பிரச்சனை எதுவும் ஆகிட போகுது.”
“அதலாம் ஒன்னும் ஆகாது. நா பாத்துக்கிறேன்.. அவளுக்கு இதான் மச்சான் கரைக்டான பனிஸ்மெண்ட்..”
“ஏன்டா மச்சான் அப்படி சொல்ற..?”
“பின்ன என்ன மச்சான் டெய்லி இதே தான் பண்ணிட்டு இருக்கா.?”
“என்னது? டெய்லி அவக்கிட்ட அடி வாங்குறியா?” ஆச்சரியமாக கேட்க
“அட ச்சீ.. அடங்கு அவ டெய்லி ஒருத்தன கை நீட்டி சிக்னல்ல அடிச்சிட்டு இருக்கா சொல்ல வந்தேன்டா..”
“அது எப்படி உனக்கு தெரியும்? அவ டெய்லி ஒருத்தன அடிக்குறானு..”
“நேத்து அதே சிக்னல் வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப ஒருத்தன அடிச்சத நானே பாத்தேன்டா..”
“சரி. அது தான் மொத தரம் போல அத பெருசா கண்டுக்கல.. இன்னிக்கு என்னைய அடிச்சிட்டு டெய்லி இதே வேலையா கேக்குறாடா?”
“ஆமா.. அவ எதுக்கு உன்ன அடிச்சா? அத சொல்லவே இல்லையே..”
“வேற எதுக்கு அவ வண்டிய இடிச்சதுக்கு தா?”
“எது? வண்டிய இடிச்சதுக்கா?”
“ம்ம்.. ஆமா..”
“அப்படி என்ன காஸ்லியான பைக்கா வச்சியிருக்கா?”
“கால்ஸிலாம் இல்ல.. ஹீரோ ப்ளஸ்ஸர் தான்.. ஸ்கூட்டிக்கு தான் இந்த அலம்பல்.”
“அப்ப டெய்லி அவ வண்டிய எவன் இடிக்குறனோ அவன அடிப்பானு சொல்ற..”
“ஆமா.. இவ்வளவு நேரம் அத தான்டா சொல்லிட்டு இருக்கேன்.. இனி அடிக்கனும்னா கொஞ்சமாச்சும் யோசிப்பால.. அதுக்கு தான் போலீஸ் சொன்னேன்..”
“ம்ம்.. சரிடா..” சொல்லிவிட்டு அந்த டாப்பிக்கை அதோடு நிறுத்திக் கொண்டான் திரு.. ஆனால் கவின் இன்னும் அந்த ஸ்கூட்டி பெண்ணை பற்றியும் காலையில் சிக்னலில் நடந்ததை பற்றி நினைத்துகொண்டு தான் இருந்தான்..
நல்ல வேளை அவளுக்கு கன்னத்தில் முத்தம் குடுத்ததை சொல்லாமல் இருந்தது நல்லது என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான் கவின்.. திருவிடம் வாய்விட்டு முத்தம் குடுத்ததை சொல்லியிருந்தால் இந்த காலேஜ் முழுதும் எப்படியும் பரவி தெரிந்துவிடும்.. அதனால் இப்போது இதை பற்றி சொல்ல வேண்டாம் என அமைதியாக இருந்தான்..
அவன் அமைதியாக இருந்தாலும் அவனுடைய மனம் அமைதியாக இல்லாமல் அந்த பெண்ணின் நினைத்து ஆர்பரிப்பில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. கவினின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க…
அந்த பெண்ணின் மனமோ உள்ளுக்குள்ளே பயத்தில் நடுங்கிக் கொண்டே இருந்தது.
கவின் கண்களில் சிக்காமல் எப்படியோ தப்பித்துவிட்டோம் என அந்த நிமிடத்திற்கான ஒரு சிறு சந்தோஷத்தில் ஸ்கூட்டியில் காலேஜ் உள்ளே சென்றாலும் அவன் கிளாஸ் நடக்கும் போது வந்து எதாவது சொல்வானோ என்ற பயம் உள்ளுக்குள்ளே இருந்தது.
அந்த பயத்துடனே அவன் காலேஜின் உள்ளே எங்கையாவது தென்படுகிறனா? என ஒரு பார்வை பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள் அந்த பெண்..
கிளாஸின் உள்ளே சென்றாலும் அவளின் இதயம் பயத்தில் வேகமாக துடித்துக் கொண்டே தான் இருந்தது. அவளும் காலையில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.
அவன் நிஜமாகவே போலீஸா இல்லை அடிவாங்கியதால் பயமுறுத்துவதற்காக பொய் சொல்லியிருக்கிறனா? என்ற யோசனையில் இருந்தாள்.
அவளின் மனம் இதை ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருக்க அவன் அடிவாங்கியவுடன் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை தைரியமாக செய்ததையும் நினைத்து பார்க்க தவறவில்லை.
அத்தனை பேர் முன்னிலையில் அடிவாங்கியும் மிகவும் சமார்த்தியமாக பேசி பயப்பட வைத்து நிலைதடுமாறிய நேரத்தில் கன்னத்தில் முத்தம் குடுத்து ஒரே வினாடியில் நிலைகுலைய செய்துவிட்டான்..
அவன் போலீஸாக இருந்து, தான் அடித்தற்கு எப்போது வேண்டுமானாலும் வந்து அரஸ்ட் செய்வான் என பயப்புடுவதா? இல்லை அங்கு இருந்த எல்லோர் முன்னிலையிலும் வைத்து தன் கன்னத்தில் முத்தம் குடுத்ததற்கு கோவப்படுவதா? என்ற குழப்பத்தில் மனதிற்குள்ளே புலங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் நிலையை பார்த்து கிளாஸில் இருந்த சிலர் என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என சொல்லிவிட்டாள். அவர்களும் அதன் பின் எதுவும் கட்டாயபடுத்திக் கேட்கவில்லை.
அடுத்து வகுப்புகள் துவக்க எல்லோரும் வகுப்பை கவனிக்க இவள் மட்டும் அந்த நினைவுடனே குழப்பத்திலே வகுப்பில் இருந்தாள்.
அவள் இருக்கும் நிலையை பார்த்து அவளின் ப்ரண்ட் தீபிகா என்னவென்று கேட்க அதலெல்லாம் ஒன்னுமில்ல சொல்லி மழுப்பிவிட்டாள்.
அதன் பின் இவளிடம் காலையில் நடந்ததை சொல்லலமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டே இருந்தாள்.. இவளிடம் நடந்ததை சொன்னால் திட்டுவாளே எனவும் யோசித்தாள்.
அப்படி திட்டினாள் கூட பரவாயில்லை. ஆனால் அது இது எதாவது சொல்லி ஏற்கெனவே இருக்கும் பயத்தை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவள் இதை பற்றி யோசிக்க யோசிக்க குழப்பமும், பயமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அந்த சமயம் பார்த்து மதிய உணவிற்கு காலேஜ் பெல் அடிக்க அப்போது தான் காலை முழுவதும் இதை பற்றியே யோசித்திருக்கிறோம் என்ற நினைப்பு அவளுக்கு வந்தது..
தீபி திட்டினாலும் பரவாயில்லை காலையில் சிக்னலில் நடந்ததை சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
இவர்கள் இருவரும் மட்டும் காலேஜில் அவர்கள் டிமார்மெண்ட் வெளியில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்காந்து சாப்பாட்டை திறந்தும் சாப்பிட மனம் இல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.
அவள் தன் பிரச்சனை சொல்லலாம் என நினைத்தாலும் சொல்ல ஒரு சிறு தயக்கமும் பயமும் இருந்தது. அவளின் தயக்கத்தை பார்த்த தீபிகா,
“ஏய்.. உனக்கு என்னடி ஆச்சு. காலைல வந்ததுல இருந்து பாக்குறேன்.. ஏதோ யோசிச்சிட்டே இருக்க..” கேட்க
“இல்லடி. இன்னிக்கு காலைல சிக்னல்ல ஒரு பிரச்சனை ஆகிடுச்சு.. அதபத்தி தான் யோசிச்சிட்டே இருக்கேன்..”
“என்னது? இன்னிக்கும் பிரச்சனையா?” சத்தமாக கேட்க தீபியின் வாயை தன் கையால் பொத்தினாள்…
இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..
Bro story super next part fast ah podunga
good going bro… superb
Thanks Ram, Haripriya…