Skip to content
Home » மது மீ தா – 11

மது மீ தா – 11

மது மீ தா – 1

மது மீ தா – 6

மது மீ தா – 10

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

கவின் தனக்கு முன்னால் பிரிந்து அவளுடைய வழியில் வீட்டிற்கு செல்லும் மதுமிதாவையே பெருமூச்சு விட்டு ஏக்கத்துடன் கூடிய மகிழ்ச்சியில் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளின் பின்னால் சென்று அவளிருக்கும் இடத்தை தெரிந்துக் கொள்ளலமா என்ற யோசனை கூட அவனின் மனதில் தோன்றியது.

பின் அவள் எனக்காவள் எங்கே போய் விட போகிறாள் என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.. கவின் தன் பார்வையில் இருந்து மதுமிதா மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மறைந்த பின்பு தான் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்..

கவினுக்கு தன் காதலை மதுமிதா ஏற்றுக் கொண்டதால் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷத்தில் அவனின் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

அந்த சந்தோஷத்திலே வேகமாக வீடு வந்து சேர்ந்தான்.. வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் மதுமிதா எதுவும் மெசேஜ் பண்ணியிருக்காளா என ஒவ்வொரு நொடியும் விடாமல் பார்த்துக் கொண்டே வந்தான்.

வீட்டில் நுழைந்ததும் தன் ரூமில் படுத்தபடியே அவனின் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனின் டிஸ்ப்ளே அணைய விடாமல் ஒரு நொடியும் அதேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மதுமிதாவிடம் இருந்து எந்த வழியிலும் எந்த ஒரு மெசேஜீம் வரவில்லை.

அதன் அவள் பிசியாக இருப்பாள் என மனதை தேற்றிக் கொண்டு அவனுடைய வேலைகளை பார்க்க சென்றுவிட்டான்.

இருந்தாலும் அவனின் மனம் முழுவதும் மதுமிதா சொன்னது போல் மெசேஜ் அனுப்புவாளா என்ற யோசனையிலே இருந்தது.

அவனுடைய வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது வந்து மெசேஜ் எதுவும் வந்திருக்கிறதா என பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஒருவேளை நைட் எதுவும் மெசேஜ் பண்ணுவாளா என யோசித்து பார்த்தான் கவின்.

அப்படி செய்தால் அவளுடைய வீட்டில் எதுவும் சொல்லமாட்டார்களா.? என பலவிதமாக தனக்குள்ளே பல கேள்விகளை எழுப்பி கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு கொஞ்சம் மன நிம்மதி தேவைப்பட்டதால் மாடியில் அங்கும் இங்கும் குறுக்காக நடந்துக் கொண்டிருந்தான்.

அந்த சமயம் பார்த்து அவனுடைய மொபைலில் ஏதோ நோட்டிபிகேசன் சத்தம் கேட்க உடனே ஓடி போய் பார்த்தான்.

அது வெறும் கம்பெனியில் வழக்கமாக அனுப்பக்கூடிய மெசேஜ் தான்.. அதை பார்த்து விட்டு கொஞ்சம் ஏமாற்றத்தோடு மீண்டும் நடக்க ஆரம்பித்தான் கவின்..

கவின் வீட்டிற்கு எதிரில் மாடியில் துணி காய போட வந்த எதிர்வீட்டு கவிதா, கவின் ஆர்வமாக மெசேஜ் எதுவும் வந்திருக்கிறதா என ஓடி போய் பார்த்தை பார்த்துவிட்டு,

“என்ன கவின் இந்த வருசம் கேர்ல் ப்ரண்ட் எதுவும் சிக்கிடுச்சா.? மெசேஜ் டோன் கேட்டதும் வேகமாக ஓடி போய் பாக்குற..”

“அய்யோ இல்லக்கா..” என்றதும்,

“டேய் சும்மா சொல்லுடா.. வெட்கபடாத..”

“நிஜமா இல்லக்கா..” சொன்னதும்,

“ம்ம்.. உன் வயச எல்லாம் தாண்டி தான்டா வந்திருக்கேன்.. நீயும் என்னமோ சொல்றனு நா கேட்டுக்குறேன்.” ஒரு நம்பிக்கை இல்லாமல் பேசிவிட்டு வாளியில் கொண்டு வந்த துணியை காய போட்டுவிட்டு கீழே இறங்கினாள் கவிதா.

கவிதா சென்றதும் கவின்,

“ச்சே என்ன இப்படி ஆயிடுச்சு.. இந்த அக்கா வேற வாய தொறந்தா மானம் போய்டுமே” என தனக்குள்ளே கருகி கொண்டிருந்தான்.

“எல்லாம் அந்த மதுவால் அவள் மட்டும் வீட்டுக்கு போனதும் அவள் நம்பரிலிருந்து ஒரே ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தால் இந்த வினையை வந்திருக்காது.. இனி இவளால் என்னென்ன நடக்க போகுதோ” என மதுமிதாவை நினைத்து தனக்குள்ளே கடிந்தான்..

நேரம் தான் சென்றதே தவிர மதுமிதாவிடமிருந்து எந்த ஒரு மெசேஜ்ஜீம் வரவில்லை.. கவினும் மொபைல் ஸ்கீரினை பார்த்து பார்த்து அலுத்து போய்விட்டான்.

அந்த சமயம் பார்த்து அவனுடைய வீட்டில் சங்கவியின் குரல் கேட்டது.. இவள் எதற்காக இந்த நேரத்தில் வந்தியிருக்கிறாள்.. கவின் அம்மாவும் அவளிடம் பேசிவிட்டு,

“அவன் மேல மாடியில தான்ம்மா இருக்கான்.. நீ போய் பாரு..” சொல்ல இவளும் மாடி ஏறி வந்தாள்.. வந்தவள்,
கவினை பார்த்து,

“என்னடா ஏதோ யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே” தன் இரு கையையும் இடுப்புக்கு பின்னால் வைத்து கட்டிக் கொண்டே கேட்டாள்..

“இல்ல.. சும்மா தான்.. போர் அடிச்சிது.. அதான் இப்படியே மாடியில சும்மா ஒரு வாக்” சொல்ல..

“என்னடா உன்ன மாதி பசங்க போர் அடிச்சா வெளியில போவாங்க.. நீ என்னடானா வயசானங்க மாதிரி மாடியில வாக்கிங் போய்ட்டு இருக்க” கேட்க

கவின் தன் மனத்துக்குள்,

“இவ வேற என் டென்சன் தெரியாம வந்து தேவையில்லாம பேசி கடுப்பு ஏதிட்டு இருக்காளே” என நினைத்தான்..

“சரி இப்ப என்ன சொல்ல வர. நா மாடியில வாக்கிங் போகாம வெளியில போகனும் சொல்றீயா?” கடுப்புல சிரிச்சிட்டே கேட்க உடனே சங்கவி பதறி கொண்டு

“ஏய்.. நா உன்னைய தான் பாக்க வந்தேன்.. நீ பாட்டுக்கு நா சொன்னதுனால எதுவும் கிளம்பி போய்டாத” சொல்ல கவினுக்கு இவள் இருந்து என்னென்ன பேச போகிறாளோ என நினைத்தான்.

அது மட்டுமில்லாமல் மதுமிதாவிடமிருந்து மெசேஜ் வந்தால் கூட எந்த ஒரு ரிப்ளைவும் பண்ண முடியாதே என கவலையில் இருந்தான்.

தன் காதலி காதலை சொன்னதால் மனதில் ஏற்பட்ட சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. அவளால் திரும்பி ஏற்பட்ட ஒரு எதிர்பார்ப்பினால் சந்தோஷம் மறைந்து கவலை வந்து தொற்றிக் கொண்டது.

அவள் ஏற்படுத்திய சந்தோஷத்தை கூட முழுமையாக நினைத்து பார்த்து அனுப்பவிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் கவின் மனதுக்குள் இருந்தது.

அதன் பின் சங்கவியும் கவினும் அந்த மாடியில் நின்று பேசினார்கள்.

அதில் சங்கவி தான் நிறைய நேரம் பேசினாள். அதுவும் மிகுந்த உற்சாகத்துடன் சந்தோஷத்துடன் அவனின் பக்கத்தில் நின்று அவனின் பரிசத்தை மிக நெருக்கத்தில் இருந்து தனக்குள் உணர்ந்தபடியே.

ஆனால் கவினோ இவள் கேட்கும் கேள்விகளுக்கு வெறும் பதிலை மட்டும் சொல்ல மனமில்லாமல் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்காக சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனுடைய மனம் முழுவதும் மதுமிதா அனுப்பும் மெசேஜிலே தான் இருந்தது.. இந்நேரம் மெசேஜ் எதுவும் அனுப்பியிருப்பாளா? ஒருவேளை அனுப்பியிருந்தால் தன்னுடைய பதிலை எதிர்பார்த்து காத்திருப்பாள் அல்லவா என அவனின் சிந்தனை முழுவதும் தன் காதலி மீதும் அவள் அனுப்பும் மெசேஜிலே தான் இருந்தது.

இருவரும் சில நிமிடங்கள் தான் பேசினார்கள். ஆனால் கவினுக்கோ நீண்ட நேரம் நின்று பேசியது போல் ஒரு மாயை.. சங்கவி,

“சரி கவின் நா கிளம்புறேன்.. பை. டுமாரோ காலேஜ்ல மீட் பண்ணலாம்” சொன்னதும் தான் கவனுக்கு நிம்மதியே வந்தது.. உடனே சுதாரித்துக் கொண்டு

“ம்ம் பை..” சொல்ல அவளும் அவனை பார்த்து சிரித்தபடியே மாடிப்படி இறங்கி கீழே சென்றாள்.. சங்கவி கீழே சென்றதும் தான் கவினுக்கு முழு நிம்மதியே வந்தது.

உடனே அவனுடைய மொபைலை எடுத்து மதுமிதாவிடமிருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என பார்த்தான். எந்த மெசேஜீம் வரவில்லை.

அது அவனுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தாலும் மறுவிதத்தில் இன்னும் மெசேஜ் அனுப்பாமல் இருக்காளே என வருத்தம் கலந்த ஏக்கத்துடனே இருந்தான்..

அன்று இரவு கவின் அவனுடைய ரூமில் படுத்திருந்த போது ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் கேட்க இதுவும் ஏதாவது கம்பெனி மெசேஜாக இருக்கும் என பார்க்காமலே இருந்தான்.

அடுத்த சில வினாடிகளிலே இன்னொரு நோட்டிபிகேஷன் சத்தம் கேட்க கவின் ஆர்வமாகி அவனுடைய மொபைலை எடுத்து பார்த்த போது அந்த டிஸ்ப்ளேவில் இரு புதிய வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருப்பதாக காட்டியது.

உடனே அவனுடைய பேட்டனை லாக் போட்டு அன்லாக் செய்து வாட்ஸ்அப் ஓபன் செய்து பார்த்தான். அதில் ஒரு புதிய எண்ணில் இருந்து இரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது.

அதை பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் உடனே ஓபன் செய்து படித்தான்.. அது மதுமிதா அவளுடைய எண்ணை தெரியப்படுத்த அனுப்பிய மெசேஜ் தான்.. அவள்

“ஹாய் பல்சர்பாய்.. இந்த ஸ்கூட்டி உனக்கு ஓகே தான.. ஹேவ் யூ அக்சப் இட்? ” என அனுப்பியிருந்தாள்.. உடனே கவின்,

“எஸ் 100% ஓகே.. பட் டு யூ லைக் திஸ் பல்சர் பாய்”

“ம்ம்..”

“ம்ம். மீன்ஸ்?”

“ம்ம் மீன்ஸ் ம்ம்..”

“ஹே.. டெல் மீ..”

“என்ன சொல்ல சொல்றீங்க?”

“உனக்கு இந்த பல்சர்பாய் பிடிச்சிருக்கா?”

“அதான் சொல்லிட்டேன்ல”

“எங்க சொன்ன? உன் ஸ்கூட்டி நம்பர் ப்ளேட்ட பாத்துக்க சொல்லிட்டு போய்ட்ட.. வேற எவனாவது இருந்து இருந்தா ஏதோ லூசு மாதிரி சொல்லிட்டு போற நெனச்சிருப்பான்..”

“ஓ.. அப்போ சார்.. இன்டலிஜென்ட் சொல்றீங்க அப்படி தான..”

“அதுல டவுட் வேற இருக்கா உனக்கு.. சரி டோன்ட் டேக் டைவட்.. சொல்ல வேண்டியது சொல்லு..”

“ஹே.. அதான் என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன்லப்பா.. நீயும் புரிஞ்சிக்கிட்ட.. தென் ஏன்பா அகேன் கேட்குற..?”

“உன்கிட்ட இருந்து அந்த வேர்ட் கேட்கனும் தான்..”

“ஓ.. ஒருவேள நா சொல்லலேனா?”

“சொல்லலேனா ஐ ரிஜக்ட் யூ” சொல்ல மதுமிதாவிடமிருந்து சில நிமிடங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை..

அவள் ஆன்லைனில் இருப்பது போல் தெரியவில்லை. சரி நாளைக்கு காலேஜில் போய் பேசி சமாதானம் செய்து கொள்ளலலாம் என முடிவு செய்து அதன் பின் எந்த மெசேஜீம் அனுப்பவில்லை.

அவன் தூங்கி மறுநாள் காலையில் எழுந்து வாட்ஸ்அப் பார்க்கும் போது ஏதோ மெசேஜ் வந்திருப்பதாக காட்டியது.. உடனே ஓபன் செய்து பார்த்தான்.. மதுமிதா தான்,

“ஐ…. லவ்…. யூ… 🙈 மை டியர் ஹேன்சம்..😍” என அனுப்பியிருந்தாள். கவின் ஆன்லைனில் இருக்கும் போது அனுப்ப வெட்கபட்டு அவன் சென்ற பிறகு அனுப்பியிருக்கிறாள் கள்ளி.

கவின் அதை பார்த்தும் அவனின் மனத்துக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி ஒன்றாக சேர்ந்து பறப்பது போல் அவ்வளவு மகிழ்ச்சி.

ஆனால் பேசும் போதே சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் அவனின் மனதிற்குள் வந்து சென்றது.. ம்ம்..

என்ன தான் பெண்கள் தைரியமாக இருந்தாலும் காதலையும் காதலிப்பதையும் நேரடியாக சொல்ல இன்னும் தைரியம் வராமல் வெட்கத்துடன் மறைமுகமாகவே சொல்கின்றனர்.

காதல் வந்தால் கூடவே நாணமும் வந்துவிடும் போல என தனக்குள்ள நினைத்துக் கொண்டான்.. இதை பற்றி மதுவிடம் இன்றே கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்து மிகுந்த சந்தோஷத்துடன் படுக்கை விட்டு எழுந்து காலேஜ்க்கு கிளம்பினான்.

இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *