அனைவருக்கும் வணக்கம்! இது என் முதல் கதை. தங்களது கருத்துக்களை எதிர்பாரக்கிறேன். உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி
“[email protected]”.
அது ஒரு அழகிய இழை உதிர் காலம். நான் எனது முதல் நாள் பொறியியல் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று எனது ஆண்கள் விடுதியில் இருந்து அரக்க பறக்க கிளம்பினேன். நான் நடை பாதையில் சென்று கொண்டிருந்த போது பாதை முற்றிலும் காய்ந்த இழைகளாக இருந்தன அதை ரசித்துக் கொண்டே முன்னே செல்ல முற்பட்டேன். நான் எனது டிபார்ட்மெண்ட் செல்ல முற்பட்ட போது அங்கு உள்ள வெளிப்புற கதவை அடைதுவிடார்கள். எனக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை!.
அப்போது தான் என் அருகில் யாரோ ஓடி வருவதை உணர்தேன். அதை சுதாரித்து யாருடா அது என்று திரும்புவதற்குள் என் முகத்துக்கு நேரே வந்து நின்றது “ஒரு ஐஸ்கிரீமினால் செய்தது போன்று ஒரு சிலை!”. நான் ஒன்றும் அறியதவனை போல அந்த சிலையை பார்த்து கொண்டு இருந்தேன். அவளோ கதவை அடைத்து விட்டார்கள் என்ற விரக்தியில் இருந்தால். அப்போது தான் எனக்கு ஒரு பாட்டு நினைவிற்கு வந்தது
“கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கழையாது
பூனை யில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது..”. என்று என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது .
அவள் நான் அருகில் இருப்பதை கவனித்தால். அவன் என்னை நோக்கி திரும்பும் போது தான் உணர்தேன் அவள் என்னை விட வயதில் பெரியவள் என்று. அப்போது தான் என் நடு மண்டையில் ஆணி அடித்து போல உரைத்தது ” அவள் என் சீனியர் என்று”.
எனக்கோ மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூ்சிகள் பறப்பது போன்று ஒரு சுகம். ” பரவாளியே நம்ம டடிபார்ட்மெண்டில் கூட இவவளவு அழகாக பெண்கள் இருப்பார்கள் போல” என்று நான் சிந்தித்து கொண்டே நின்றேன். இது அனைத்தும் அவள் என்னை நோக்கி திரும்பிய வினாடிகுள் நடந்தது.
அவள் என்னிடம் ” அவர்கள் அப்படி தான் சிறிது கால தாமதமாக வந்தால் கூட உள்ளே விட மாட்டார்கள்!” என்று கூறினால்.
“ஓ அவ்வளவு கண்டிப்பான டிபார்ட்மெண்ட் ஆ?” என்று கேட்டேன்.
அவளும் அதற்கு சிரித்துகொண்டே ” இல்லை இதில் மட்டும் தான் கண்டிப்பாக இருப்பார்கள் மற்ற படி எல்லாம் ஃப்ரீ தான்” என்று பதிலளித்தார்.
” அச்சச்சோ அப்போ நமக்கு பெரிய பிரச்சினை ஆச்சே!” என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.
அவள் ஏதோ என்னிடம் கூற முற்படுவதை உணர்தேன்.
” நீ பிரசெர் தானே?” என்று என்னிடம் கேட்டாள்.
நானும் “ஆம்” என்று கூறினேன்.
அவள் “சரி, என்னுடன் வா நான் உனக்கு காலேஜ் பற்றி கொஞ்சம் சொல்லி தருகிறேன்”என்று என்னை அழைத்தாள்.
எனக்கு தான் இப்போ கிளாஸ் போக முடியாதே ” சரி ” என்று சம்மதம் கூறினேன். அவள் நாம் முதலில் ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிடுவோம் என்று என் சம்மதம் கேட்டால். நானும் சம்மதம் கூறினேன்.
இருவரும் அங்கு இருந்து கிளம்பினோம்.
அங்கு இருந்து நடக்கும் தூரத்தில் ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது. அங்கு சென்று ஆர்டர் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டு இருந்தோம். அவள் பொதுவாக காலேஜ் பற்றியும் டிபார்ட்மெண்ட் பற்றியும் கூறிக்கொண்டு இருந்தால். ஆனால் எனக்கோ எதுவும் என் புத்தியில் ஏற வில்லை. நான் அவளிடம் எப்படி அவளது “வாட்ஸ்அப் எண்” கேட்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். அந்த சமயம் பார்த்து அவளுக்கு கால் வந்தது.
எனக்கோ எங்கோ தூரத்தில் சத்தம் வருவது போல் தோன்றியது. அவள் தன் ஃபோன் ஐ “கோடை காலத்தில் பூர்த்துக் குலுங்கும் கண்களைப் பறிக்கும் அழகிய பூக்கள்” போன்றே தோற்றம் தரும் அவள் கன்னத்தின் அருகில் கொண்டு சென்ற போது தான் நான் நினைவிற்கு வந்தேன். அவள் காலில் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்.
நானோ அவளை ஒன்றும் புறியதவனை போல உற்று நோக்கி கொண்டிருந்தேன்.
அவளோ நான் இருப்பதை கொஞ்சம் கூட யோசிகதவலாய் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தாள். அவள் ஃபோன் யில் இருந்து ஒரு ஆணின் குரல் எனக்கு கேட்டது. அவ்வளவு தான் ” என் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது”. ” அடச்சை! என்ன என்னவோ லாம் யோசித்து வெய்தது எல்லாம் போச்சே!” என்று எண்ணிக்கொண்டு அமைதியாக அமர்திருந்தேன்.
அது ஒருபக்கம் இருக்க “பக்கத்து டேபிளில் இருந்து ஒருவன் “ஹை!” என்று சொல்லிக்கொண்டே என் டேபிளை நோக்கி வந்தான். எனக்கு யாரா இவன் ” சிவ பூஜை ல கரடி நோலஞ்ச” மாறி என்று கதரிகொண்டு இருந்தேன். அவள் அவனை முற்றிலும் கண்டு கொள்ளாமல் கால் பேசிக்கொண்டு இருந்தால். அவனோ முகம் சுள்ளித்துகொண்டு என் அருகில் அமர்ந்தான். பிறகு என்னை “யாரு இவன்? இவள் கூட என்ன செய்கிறான்? ” என்று கேட்பதை போல என்னை பார்த்தான். எனக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
அவள் கால் பேசி முடித்ததும் என்னை ஒரு ஒர கண்ணால் பார்த்து விட்டு அவனை நோக்கி திரும்பினாள். “அந்த பார்வை ஒரு அம்பு என் நெஞ்சை இரண்டாக பிளந்து பிரித்து எடுத்து கொண்டு செல்வதை போல” ஒரு வினாடி உணர்ந்தேன்.அவள் அவனை பார்த்து “ஹை” என்று கை அசைத்தாள். அவன் இவளிடம் ” என்ன? இன்னைக்கும் லேட் ஆ? ” என்று நக்கலாக கேட்க இவளும் சிரித்துக் கொண்டே “ஆமாம்! என்ன செய்ய, தினமும் இதையே ஒரு புளைப்பாய் வைத்திருக்கிறேன்” என்றால். அதன் பின்னர் நான் இருப்பதை உணர்ந்தவளாய் ” இவன் என்னுடைய ஜூனியர் என்று அவனிடம் அறிமுகம் செய்தால். மற்றும் அவனை என்னிடம் இவனும் உன்னுடைய சீனியர் தான் என்று அறிமுகம் செய்தால்.
பின்னர் நாங்கள் முவரும் பேசிக் கொண்டு இருக்க. ஒரு 7 பேர் ரெஸ்டாரன்ட் உள்ளே வருவது தெரிந்தது. “இது யாரு டா! என்ன டா பண்ண காத்து இருகிங்க என்று யோசிப்பதற்குள் இவளை பார்த்து கை அசைத்து விட்டார்கள்.” எனக்கோ என்னடா இது! என்னை இங்க கூட்டி கொண்டு வந்து வெறுப்பு எதுகிரலே என்று கோபம் கோபமாக வந்தது. “சரி, பிழைத்து போகட்டும் எனக்கோ தெரிந்தது இவள் மட்டும் தான் இப்போதைக்கு அதையும் என் விட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
அனைவரும் எங்களை சுற்றிய வாரு அமர,” எனக்கோ போச்சு டா இன்னைக்கு ஃபுல் ஆ வீணா போச்சு” என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்! இவர்களிடம் இருந்து எப்பாடு பட்டாவது இவளை தனியாக பிரித்து சென்று அவளது எண் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறித்தனமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் ஆள் மண்டையில் ஒரு யோசனை வந்தது. “சரி, அதையே முயற்சி செய்து பார்க்கலாம் என்று செயல் படுத்த தொடங்கினேன்”!
டக் டக் டக்! டிக் டிக் டிக்! என்று என் கடிகாரம் ஒடும் சப்தம் என் காதில் விழுந்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று “டமால்! டமால் என்று நான் அமர்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தேன்!”.
தொடரும்!. .
ஏதேனும் பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இக்கதை எழுதும் போது தான் உணர்ந்தேன் தமிழில் நான் அரிந்து கொள்ள வேண்டியது இன்னும் கடல் அளவு உள்ளது என்று.
உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். ஏதேனும் திருத்தம் இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். நான் தொடர்ந்து கதை எழுத உங்கள் கருத்துகளே சத்துட் டானிக். கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி “[email protected]”.