சென்ற பகுதியின் தொடர்ச்சி…
கதை சுமதியின் பார்வையிலே தொடர்கிறது.
அந்த பொண்ணு(ஜெனி) மேலே போய் தம்பியை கொஞ்சம் சுத்தப்படுத்தி அவங்களுக்கு துணிமணி போட்டுவிட்டு கீழே வந்தது.
கீழே இறங்கி வரும் போது சுவரில் மாட்டியிருந்த பெரிய அய்யா படத்தை பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தது. சமையற்கட்டில் வேலை பார்த்திட்டு இருந்த என்னிடம் வந்து,
“அந்த படத்துல இருக்குறது வெங்காடசலம் ஐயா தான?”
“ஆமாம்மா..”
“உனக்கு தெரியுமா? அவங்கள”
“இல்ல தெரியாது. பழக்கமும் இல்ல. கேள்வி பட்டிருக்கேன். அவ்வளவு தான்.”
“ம்ம். அப்போ அவங்க.”
“என்னம்மா நீ இதுக்கூட தெரியாத உனக்கு..”
“தம்பி அய்யாவோட ஒரே பிள்ளை. மொத்த சொத்துக்கும் இவர் தான் ஒரே வாரிசு..”
“இவங்களுக்கு இரண்டு மூனு கம்பெனி இருக்கு கேள்விபட்டிருக்கேன்.”
“ஆமாம்மா.. கம்பெனில இருந்து கூட ஆளுங்க வந்து தம்பிய கம்பெனிய வந்து பாத்துக்கோங்க சொல்லிட்டு போனாங்க. அப்பதான் நல்லபடியா நடத்த முடியும் சொல்லிபாத்தாங்க. பெரிய அய்யாவோட சில பிரண்ட்ஸ் கூட சொல்லி பாத்தாங்க. ஆனா தம்பி தான் இன்னும் போகாமலே இருக்கு..”
“ஏன் என்ன ஆச்சு?”
“தம்பி, பெரிய அய்யா போனத பத்தியே இன்னும் நெனச்சிட்டு இருக்காங்க.. நானும் எவ்வளவோ சொல்லி பாத்திட்டேன்.. ஒன்னும் நடக்குற மாதிரி தெரியல..”
என்னுடைய பார்வையில் இருந்து..
நான் கீழே இறங்கி வருவதை பார்த்த பின் இருவரும் பேசிக் கொண்டிருந்தை நிறுத்திவிட்டனர். ஜெனியை பார்த்து
“ஏய் நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
“இல்லைங்க நேத்து நீங்க குடிச்சிட்டு நிதானம் இல்லாம ரோட்டுல மயக்கம் போட்டு விழுந்து கிடந்தீங்க.. உங்ஙள நா தான் வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போனேன்.. அதான் இப்ப ஒரு தடவ வந்து உங்கள பாத்துட்டு போலாம் வந்தேன்.”
உடனே சுமதி, “ஆமா தம்பி இந்த பொண்ணு தான் ஆட்டோ பிடிச்சு உங்கள கூட்டி வந்தது.. இல்லைனா என்ன ஆகியருக்கும்னே தெரியல..”
“சரி நீ பண்ணின உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்.”
“அய்யோ நீங்க எதுங்க தாங்க்ஸ்லா சொல்றீங்க.. நீங்க எனக்கு பண்ணின உதவிக்கு முன்ன இதலாம் ஒன்னுமில்ல.. உங்களுக்கு உதவி செய்ய நா கடமை பட்டிருக்கேன். அப்புறம்… தயங்கிக் கொண்டே இருந்தால்..”
“ம்ம்.. சொல்லு.. ஏதோ சொல்ல வந்த அமைதியாகிட்ட..”
“அத எப்படி சொல்றது தெரியல..”
“எப்படி சொல்றதுனா இப்ப வாயால தான் சொல்ல முடியும். சோ வாயால சொல்லு.”
“அது இல்லைங்க.. நீங்க குடிக்கிறது கொஞ்சம் குறைச்சுக்கிட்ட நல்லா இருக்கும்.. ஓவரா குடிச்சா உங்க உடம்பு தான் நல்லதில்ல..”
“ம்ம். நீ சொல்றது சரி தான். ஆனா என் மனசுக்கு புரியலனும்ல.. ஒன்ன மறக்கனும்னா இன்னொனுக்கு அடிமையா இருந்ததான் மறக்க நினைக்குறத மறக்க முடியும்.”
“அதுக்கு இப்படியே எவ்வளவு நாள் குடிச்சிட்டே இருப்பீங்க..”
“அது எனக்கே தெரியல ஜெனி.. குடிச்சாதான் கொஞ்சம் நல்லா இருக்கு.. என்ன பண்ண சொல்ற..”
“ம்ம். குடிக்காம இருக்க சொல்றேன். முதல்ல வெளில போகாம வீட்டுல இருக்க பாருங்க.. வெளில போன திரும்பி உங்களுக்கு குடிக்க தான் தோணும்..”
“சரி டிரை பண்றேன்..”
“உங்களுக்கு எப்படியோ இருந்தா எனக்கு கால் பண்ணி பேசுங்க.. இல்ல என்ன கூப்பிட்டுங்க நா வந்து உங்கள கவனிச்சுக்கிறேன்.”
“ம்ம்.. ஓகே..”
“பிரஸ் பண்ணிட்டிங்களா?”
“இல்ல.. இன்னும் பண்ணல..”
“சரி பண்ணிட்டு வாங்க.. டீ போட்டு தர சொல்றேன்..”
நான் போய் பிரஸ் பண்ணிட்டு முகம் கழுவி பிரஸ்அப் ஆகிட்டு கீழே வந்தேன். அதற்குள் டீ சுடசுட தயாராக இருந்தது. அதை குடிச்சிட்டு இருக்க கம்பெனியில் இருந்து மேனேஜர் மனோஜ் வீட்டிற்கு வந்தார்.
“சார் உங்ககிட்ட சில இம்பார்ட்டென்ட் ஃபைல்ல சைன் வாங்கனும்..”
“ம்ம். குடுங்க மனோஜ்..”
அவர் குடுத்த ஃபைல் ஒருமுறை சரி பார்த்து விட்டு எல்லாம் சரியாக இருந்ததால் கையெழுத்து போட்டு குடுத்துவிட்டேன்.
“சரி மனோஜ். எனிதிங்க் இம்பார்ட்டென்ட்..”
“எஸ் சார்.. உங்ககிட்ட ஒரு சொல்ல வேண்டிய விஷயம் இருக்கு.. அத சொல்லிட்டு என்ன டிசிசன் எடுக்கலாம் கேட்டு போலாம் வந்தேன்.. மெயின்னா இந்த மேட்டர்காக வந்தேன்..”
“ம்ம். சொல்லுங்க மனோஜ்..”
“இல்ல சார்.. 3கம்பெனிலையும் ஸ்டாப் ஒழுங்கா வேலை செய்யுறது இல்லை அல்ரெடி சொல்லியிருந்தேன். அதுக்கு இதுவரை எதுவும் சொல்ல.. என்ன பண்ணணும் கூட சொல்லல.. அதுனால என்னால எதுவும் பண்ண முடியல..”
“ம்ம். ஆமா.. சொன்னிங்க.. இப்ப என்ன ப்ராப்ளம் சொல்லுங்க..”
“இல்ல சார்னு..” சுமதி, ஜெனியை பார்க்க..
“அவங்கலாம் எதும் லீக் பண்ணமாட்டாங்க.. நீங்க சொல்லுங்க..”
“ஸ்பினிங்க கம்பெனிக்கு ஏற்கெனவே வந்திட்டு இருந்த ஃபாரின் ஆடர் இந்த டைம் கேன்சல் ஆகிடுச்சு. அது எப்படி நடந்தது தெரியல சார்.”
“அப்புறம் நம்ம பில்டிங் கன்ஸ்ட்ரக்டன்ஸ் கம்பெனில் கவர்மெண்ட் ப்ராஜெக்ட் கோட் பண்ண அமெவுண்ட் எப்படி லீக் ஆச்சு தெரியல சார். இதனால சம் கிரோர்ஸ் லாஸ் ஆயிடுச்சு.. இப்படி போனா கம்பெனி லாஸ்ல போய்டும். ஓர்கர்ஸ்க்கு சேலரி கூட போட முடியாது..”
“ஓ.. மேட்டர் கொஞ்சம் சீரியஸ் தா இருக்கு.. நீங்க இதுக்கு யார் காரணம் ஃபைன்ட் பண்ணுங்க.. இந்த மாசம் கடைசில அவங்களுக்கு மெமோ குடுத்து செட்டில் பண்ணிடலாம்..”
“ஓகே சார்.. நீங்க எப்போ கம்பெனிக்கு வருவீங்க சார்..”
“இல்ல மனோஜ் நா வர இரண்டு வாரம் ஆகும்.. அதுவரை அங்க நடக்குறத வந்து இன்பார்ம் பண்ணுங்க. என்ன டிசிசன் எடுக்கனும் சொல்லிடுறேன்..”
“ம்ம். ஓகே சார்..”
“ஓகே மனோஜ்.”
அந்த மேனேஜர் கிளம்பி போனதும் ஜெனி ஏதோ சொல்ல தயங்கிகிட்டே என்னை நோக்கி வந்தாள்.
“உங்ககிட்ட ஒன்னும் சொல்லலமா..?”
“ம்ம் சொல்லு..”
“இல்ல இது முக்கியமானது. அதான் எப்படி சொல்றது. சொன்ன நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல..”
“அதலாம் பரவாயில்ல சொல்லு.. தப்பா இருந்தா கூட ஓகே.. நோ பிராப்ளம்..”
“இல்ல இப்ப வந்தது.. யாரு..?”
“என்ன புதுசா இதபத்திலாம் கேக்குற?”
“இல்ல சொல்லுங்க.. ஏன் கேட்டேன் சொல்றேன்..”
“கம்பெனிக்கு லீகல் மேனேஜர்.. மேக்ஸ்மம் டிசிசன் அப்பா இவரு கூட சேர்ந்து தான் எடுப்பார்.. இப்ப ஏன் கேட்ட அத முதல்ல சொல்லு..”
“இல்ல நீங்க பண்ணின உதவிக்கு உங்க கம்பெனில அப்ரண்டிஸ்ஸ வொர்க் பண்ணி ப்ராப்ளம் நா சால்வ் பண்ணட்டா..”
“நீயா..? எப்படி?”
“இல்லீங்க.. என்னால முடியும்.”
“அதான் எப்படி கேக்குறேன். இத பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல உனக்கு இதுல..”
“நோ சார்.. ஐ ஹேட்(had) ஃபைவ் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இன் திஸ் ஃபீல்ட் அன்ட் ஆல்சோ ஐயம் எம். பி. ஏ கோல்ட்மெடல் இன் இம்போர்ட் எக்ஸ்போர்ட் சார்..”
ஜெனி இங்கிலிஷில் இவ்வளவு ஸ்டைல்லா அழகா பேசுனது பார்த்து மிரண்டு போய்ட்டேன்.. ஒருபக்கம் இவள் பேசுனது ஆச்சரியம். மற்றொரு பக்கம் இப்படி பேசுபவள் ஏன் இந்த மாதிரி தொழில் செய்ய வேண்டும் என்ற குழப்பம்…
“சார்..” கூப்பிட இந்த உலகத்திற்கு வந்தேன்.. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தான் இருந்தேன்.
“இல்ல ஜெனி.. நீ எப்படி?”
“இங்கிலிஷ்ல பேசுனது ஆச்சிரியமா இருக்கா? இல்ல இவ ஏன் படுக்குறத தொழிலா பண்ணிட்டு இருக்கா ஆச்சரியமா இருக்கா?”
“எனக்கு எல்லாமே ஆச்சரியமா இருக்கு.. ஐ காண்ட் பிலீவ் திஸ்.. ஐயம் நாட் எக்ஸ்பேட் யு ஆர் வெரி டெலேன்ட்டேடு கேர்ள்..”
“ஓகே சார். நா கேட்டதுக்கு ஆன்சர் எதுவும் பண்ணல சார் நீங்க”
“அதுக்கு முன்ன டேலண்டேடு கேர்ள் இருந்திருக்க அது நீ பேசுனத வச்சு நல்லா தெரியுது. ஆனா எப்படி இந்த மாதிரி உன் லைப் சேன்ஜ் ஆச்சு?”
“எல்லாத்துக்கும் காரணம் விதி சொல்றதா? இல்ல சுயநலம் சொல்றதா தெரியல சார்.. அது ஓல்ட் ஸ்டோரி சார்.”
“அத தான் கேக்குறேன் என்னானு.. உன் லைப்ல என்ன நடந்திருக்கு உனக்கு வேலை குடுக்க போற நா தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“வேலை கன்பார்ம் ஆ குடுக்க போறீங்களா?”
“நீ முதல்ல உன் ஸ்டோரிய சொல்லு.. அதர்ஸ் வில் பி டிசைட் லேட்டர்.”
“சரி சார்.. நீங்க இவ்வளவு தூரம் கேக்குறதுனால சொல்றேன்..”
“ம்ம்.. சொல்லு.”
எல்லா பொண்ணுங்க மாதிரி என் வாழ்க்கையும் நல்லா தான் போய்ட்டு இருந்தது. காலேஜ் கூட நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி டிஸ்டிங்ஸன்ல தான் பாஸ் பண்ணேன்.
காலேஜ் டாப்பர் வந்து மெடல் வாங்குனேன். கேம்பஸ்ல ஒரு நல்ல பெரிய கம்பெனில முதல்ல ஜாயின் பண்ணேன். அதுவரை வெளியுலகம் என்னானு தெரியாது. இந்த உலகத்துல பிரச்சனை எதுவும் நா பாத்ததுமில்ல. ஃபேஸ் பண்ணதுமில்ல.
அந்த கம்பெனில ஜாயின் பண்ணி ஆறு மாசம் வரை நல்லாதான் என் லைப் போய்ட்டு இருந்தது. அதுக்கு பிறகு என் வாழ்க்கைல வந்த முதல் ஆண் தினேஷ். அவனும் அதே கம்பெனில தான் வேலை பாத்தான். பாக்க நல்லவன் மாதிரி தா தெரிஞ்சான்.
என்கூட நல்லா தான் பழகுனான். இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் தா பழகுனோம். நல்லா போய்ட்டு இருந்த லைப்ல ஒருநாள் தினேஷ் என்கிட்ட வந்து லவ் புரோபஸ் பண்ணுனான்.. முதல்ல நா அத ஒத்துக்கல. அவனும் கம்பெல் பண்ணாம டைம் வேணா எடுத்துக்கோ.
அதுவரை நா உன்ன லவ் பண்ண சொல்லி டிஸ்ட்ர்ப் பண்ணமாட்டேன் சொல்லிட்டான். அதே மாதிரி என்கிட்ட நடந்துக்கிட்டான். அந்த ஆட்டிடியுட்(Attitude) பிடிச்சு போய் நா அவன் லவ் ஆக்சட் பண்ணிக்கிறேன் சொல்லி புரோபஸ் பண்ணிட்டேன்.
இரண்டு பேரும் நல்லா ஜாலியா வீக்என்ட்ல சினிமா, மால், பார்க், பீச் ஊர் சுத்தினோம்.. என் வீட்டுல லவ் விஷயத்த சொன்னப்ப ஒத்துக்கல.
அத தினேஷ்ட்ட சொன்னப்ப விடு பாத்துக்கலாம். ஒத்துக்கலைனா நாம ரிஸிஸ்ட்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் சொல்லிட்டான்.
அதே மாதிரி இரண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.. லைப் நல்லாதான் போய்ட்டு இருந்தது. நா ப்ரக்னட் ஆனேன்.
அத இரண்டு பேரும் செலிப்ரேட் பண்ணோம். அடுத்த திரி மாந்த்ல கம்பெனில இரண்டு பெரிய ப்ராஜெக்ட் ஒன்னு கிடைச்சது பார்ட்டி குடுத்தாங்க.
அதுக்கு நானும் தினேஷ் தான் காரணம். அதுனால அடுத்த ப்ராஜெக்ட்க்கும் எங்கள அப்பாயிமெண்ட் பண்ணாங்க.
எல்லா நல்லாதான் போய்ட்டு இருந்தது. தினேஷ் சந்தோஷத்துல டெய்லி கொஞ்சம் குடிச்சு வருவான். இரண்டாவது ப்ராஜெட்க்கு கம்பெனில பேசி அமெவுண்ட் டிசைட் பண்ணி டாக்குமெண்ட் ரெடி பண்ண சொல்லிடாங்க.
நா மாசமா இருந்ததால தினேஷ் தான் என் வேலையும் சேர்த்து பாத்துட்டு இருந்தான். அவன் பண்ண சின்ன தப்புனால என் வாழ்க்கைல நல்லா இருந்த நான் பிறந்த குழந்தைய வச்சிட்டு நடுதெருவுக்கே வந்துட்டேன் சார்.. சொல்லி தேம்பி தேம்பி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
இனியும் என்னோடு வருவாள்..
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.
சூப்பர் நண்பா கலக்குங்க
நன்றி ஜெயந்தி. உங்களுக்கான கதையின் முதல் பகுதி நாளை காலை வெளியாகும். நீங்களே கதையை சொல்வது போல் எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்கள் மற்றும் கதையை கொண்டு செல்வது பற்றி சொல்லுங்கள்..
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா! நா நெனச்சி பாக்கல நீங்க நா கேட்டதுக்கு கத எழுதுவீங்கன்னு,. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நண்பா. கண்டிப்பா கத படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்ரான்.